கண் கலங்குது 25 நாள் குழந்தை

குழந்தை பிறந்த 25 நாள் ஆகிறது ஆண் குழந்தை கண் கலங்குது என்ன செய்ய வேண்டும்?.

ஒன்றும் செய்ய வேண்டி இராது.

குழந்தை பிறக்கும் போது எம்மைப் போல் முழுமையாக இருப்பது இல்லை. இதற்கு முன் அழுதாலும் கண்ணீர் வராமல் இருந்திருக்கும்; இப்போது தான் கண்ணீரை அவதானிக்கிறீர்கள் இல்லையா? இப்போது தான் குழந்தையின் கண்ணீர்ச் சுரப்பிகள் வேலை செய்ய ஆரம்பித்திருக்கின்றன. அதனால் தான் இப்படியே தவிர பிரச்சினை என்று எதுவும் இராது. உங்களுக்கு யோசனையாக இருந்தால் குழந்தையை மருத்துவரிடம் எடுத்துப் போங்கள்.

‍- இமா க்றிஸ்

கண் பொங்குறத சொல்றீங்களா? ஹீட் தான் காரணம், வேற ஒன்னும் இல்ல. தாய்ப்பாலை ஒரு சொட்டு கண்ணில் விடுங்க சரியாயிடும். பயம் வேண்டாம். குழந்தை கொஞ்சம் வளர்ந்தால் ஒரு ஸ்பூன் தண்ணீர் கொடுக்கலாம். ஆனால் பிறந்து 25 நாட்கள் ஆவதால் யோசிக்கவேண்டி உள்ளது. ஆனால் என் குழந்தைக்கு 15 நாட்களில் ஒரு சங்கு வெது வெதுப்பான நீர் கொடுத்தோம்.

- பிரேமா

மிக்க நன்றி அக்கா.....

மேலும் சில பதிவுகள்