குழந்தை வரம் வேண்டும்

ஹாய் என் பெயர் பானு எனக்கு திருமணமாகி 1 1/2 வருடம் ஆகுது. எனக்கு என்னும் குழந்தை இல்லை நகல் மருத்துவமனைக்கு சென்றோம் அவர்கள் டெஸ்ட் சாய்த்து விட்டு உங்களுக்கு கர்ப்பப்பை நன்றாக உள்ளது என்று சொன்னார்கள். ஆனால் கர்ப்பப்பையில் நீர் குமிழிகள் உள்ளது என்று சொன்னார்கள் அதெற்கென மருந்துகளும் மாத்திரைகளும் சாப்பிட்டு வந்தோம் 4 மாதங்களாக ஆனால் எந்த பயனும் இல்லை. வேறுஒரு மருத்துவமனைக்கு சென்றோம் அங்கு உங்களுக்கு எந்த குறையும் இல்லை என்று சொன்னார்கள் உங்களது உடல் எடை அதிகமாக உள்ளது எடை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்று சொன்னார்கள் கருமுட்டை வளர ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து ஊசி போட சொன்னார்கள் நானும் போட்டுக்குட்டு வந்தோம் 5 ஊசி போட்டோம் கருமுட்டை நன்றாக வளைந்து இருக்கிறது சொல்லி அந்த கருமுட்டை உடைய ஊசி போட்டார்கள் பின்பு இருவரும் இந்த நாள் வரை ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னாரகள் அதிபோலவே செய்தோம் ஆனால் எந்த பலனும் இல்லை பணம் 7000 நஷ்டமானதுதான் மிச்சம். மீண்டும் இதேபோல் பண்ணனும் சொன்னாரகள் என்னால் மாதம் மாதம் இப்படி செலவு செய்ய முடியாது எங்களது வருமானம் குறைவு. நான் சென்னையில் வசித்து வருகிறோம் எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை சகோதரிகள் எனக்கு உதவி செய்வீர்களா நான் வணிகவரி துறையில் டிபிஸ்ட் வேலை பார்த்து வருகிறேன் எனது சொந்த ஊர் சேலம் ஆகும். எனக்கு ஒரு நல்ல ஆலோசானை சொல்லுங்க தோழி வீட்டில் இருந்த படி என்ன செய்வது உடல் எடை வேகமாக குறைய என்ன செயலாம் எனக்கும் எனது கணவருக்கும் உடல் சூடு இயற்கையாகவே அதிகமாக உள்ளது அதனால் குழந்தை தள்ளிபோகுமா எனக்கு 32 வயது எனது கணவருக்கு 33 வயது நடக்கிறது வயது அதிகமாக இருப்பதால் தள்ளிபோகிறதா இதனால் நான் அதிக மன அழுத்தும் ஏற்படுகிறது இந்த இணையதளம் பார்த்தேன் படித்தேன் பிடித்திருந்தது பலரின் ஆலோசனை மனதிற்கு ஆறுதலாக இருந்தது நாமும் நம்முடைய வேதனை சொன்னால் நமக்கும் ஒரு தீர்வு கடைக்கும் என்று நம்புகிறேன். தற்போது கழற்சி காய் சாப்பிட்டு வருகிறேன் சூடு தனியா இரவில் வெந்தயம் சீரகம் இரண்டியும் சுடு தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெதுவெதுப்பாக சூடு பன்னி குடித்துவருகிறன் பின்பு கொண்டைக்கடலை ஊறவைத்து சாப்பிட்டு வருகிறேன் மற்றும் கற்றாழை சாப்பிட்டு வருகிறேன் இவை அனைத்தும் சாப்பிடலாமா உடலுக்கு நல்லதா இதுவே போதுமா வேறு ஏதாவது ஆலோசனை சொல்லுங்கள் தோழி உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன். இதுமட்டும் அல்ல நான் போகாத கோவில் அல்ல வீட்டில் செய்யாத வழிபாடு இல்லை இதற்குமேல் என்ன செய்வது தோழி தயவு செய்து பதில் சொல்லுங்கள்.

Hi en name uma enakum thirumanam mudinthu 2 varudam mudinthu vitathu inum baby illa treatment edukurom same engalukum heat body help me frds

பதில் மற்ற இழையில் கொடுத்துவிட்டேன். http://www.arusuvai.com/tamil/comment/397213

‍- இமா க்றிஸ்

ஹாய் தோழி என்னக்கு ஒரு சந்தேகம் நான் குழந்தைக்காக வெயிட் பன்ற ஆனா உடல் பயிற்சி செய்யலாமா சிப்பிங் விளையாடலாமா வாக்கிங் வேகமாக நடக்கலாமா என்னக்கு பதில் சொல்லுங்கள் தோழி ப்ளீஸ்

எனக்கு மாதம் ஒரு முறை தலைக்கு குளிப்பேன் (ப்ரீயட்) ஆனால் தேதி இரண்டு அல்லது மூன்று நாட்கள் தள்ளி வரும் ஆனால் மாதம் கடைசிக்குள் வந்துவிடும் அல்லது கடைசி தேதி வந்துவிடும் இதில் என்ன சந்தேகம் என்றால் ஒரு சுழற்சி 28 நாட்கள் என்று சொல்லுகிறார்கள் அல்லது 30 அல்லது 32 நாட்கள் என்று சொல்லுகிறார்கள் எனக்கு குளிக்கும் தேதி 24 அடுத்த மாதம் 27 அடுத்த மாதம் 28 கடைசீயாக ஜனவரி மாதம் 30 தேதி குளித்தேன் எனக்கு சுழற்சி எத்தனை நாள் சுழற்சி சொல்லுக இது ரெகுலரா இருகலார

பிளாக் டீ குடிப்பது நல்லதா கெட்டதா நான் அதிகமாக பிளாக் டீ குடிப்பேன்

enaku irregular periods.but I take treatment try to concive.today 28th day pregnancy symtomy epo thereyum adivayeru pain na iruku ans pls frnds

ப்ளாக் டீ உடலில் நீர் சத்து குறைத்து விடும் என்கிறார்கள். அடிக்கடி யூரின் வரும்.. நம் உடலில் அதிக நீர் வெளியேறி தலைச்சுற்றல் வரலாம்.. முடிந்த வரை அடிக்கடி ப்ளாக் டீ அருந்த வேண்டாம்..

உங்களுக்கு 32நாள் சுழற்சி. இது நார்மல் தான்..

ஒழுங்கற்ற மாதச் சுழற்சி என்றாலும் 45 நாள் கழித்து ஹோம் ப்ரெக்னன்சி டெஸ்ட் செய்து பாருங்க. முடிவு எது வந்தாலும் மருத்துவரிடம் போங்க. முதலாவது சிம்ப்டம் பீரியட்ஸ் தள்ளிப் போவது தான்.

‍- இமா க்றிஸ்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சு எனும் போது ப்ளாக் டீ நல்லதாக இருந்தால் கூட அதிகம் எடுத்தால் பாதகமான விளைவுகள் இருக்கலாம். கெட்டதாக இராது. அது நஞ்சு இல்லை. ஆனால் அது உணவும் இல்லை, எனவே சாப்பிடவே தேவையில்லை.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்