சிறுநீர் கோளாறு

ஹாய் தோழி வணக்கம்

எனது பெயர் பானு எனது அம்மாவுக்கு 50 வயது ஆகிறது அவருக்கு சிறுநீர் தொல்லை உள்ளது

சிறுநீர் சரியாக வருவதில்லை எவ்ளவு தண்ணீர் குடித்தாலும் வருவதில்லை உடல் வீக்கமாக மாறுகிறது அவர் நினத்தால் மட்டுமே சிறுநீர் வெளியேறுகிறது இதற்கு தீர்வு என்ன தோழி தெரிந்தால் உடனே சொல்லுங்கள்

சுரைக்காய், பச்சை பசலி (செடி பசலை) கீரை சாப்பிட சொல்லுங்க. நீர் வேலியேராமல் கை கால் வீக்கம் இருப்பவர்களை சாப்பிட கூறுவார்கள்.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

பானு... உடல் வீக்கம் இருந்தால், அதோடு சிறுநீர்ப் பிரச்சினையும் இருந்தால் நீர் & நீர் அதிகம் உள்ள காய்கள் சாப்பிடச் சொல்வது பொதுவாகச் சொல்வது தான். எத்தனை நீர் குடித்தாலும் சிறுநீர் கழியவில்லை, பதிலுக்கு உடல் வீங்குகிறது என்பதால் சொல்கிறேன். அவர் நீர் அருந்துவதைக் குறைக்க வேண்டி இருக்கலாம். நீர் விகிதாசாரம் அதிகரிக்க அதிகரிக்க, சோடியம் செறிவு குறையும். இதன் விளைவாக வேறு பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. என் தாயார் மருத்துவமனையில் இருந்த சமயம் அந்த வார்டில் இருந்த எல்லோரும் நீர்க் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். ஒரு நாளுக்கு இத்தனை லீட்டர் / மில்லிலீட்டர் என்று காப்பி முதல் அனைத்தையும் கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்துக் கொடுப்பார்கள். ஒரு தடவை மருத்துவரிடம் காட்டிவிடலாம். அவர்கள் நீர் அதிகம் கொடுக்கச் சொன்னால் கொடுங்க.

‍- இமா க்றிஸ்

சிறுநீரக கோளாறுக்கு கண்டிப்பாக நீங்கள் சொல்லுவதுபோல மருத்துவரை பார்க்கிறோம் உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி மேடம்

ஹாய் தோழி சத்யா ரொம்ப நன்றி நீங்க சொன்ன பதிலுக்கு இந்த காய் கண்டிப்பாக சாப்பிட செய்து தருகிறேன் மிக்க நன்றி தோழி

;))))))) இப்படிப் பதில் சொன்னால் எனக்கு உங்களுக்குப் பதில் சொல்லத் தோணாது. ;) நீங்க நான் சொன்னதையும் செய்வீங்க, அதற்கு எதிர்மாறாக அந்தச் சகோதரி சொன்னதையும் செய்வீங்களா? யோசிச்சுச் செய்றேன் அல்லது டாக்டர்ட்ட கேட்டு அதன் படி செய்கிறேன் என்கிறது ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில். இது!!! உங்களுக்குப் பொழுது போகவில்லை என்று தொடர்ந்து கேள்விகளாகத் தட்டித் தள்ளுகிறீர்களா என்ன! ;-)

‍- இமா க்றிஸ்

மேடம் நீங்க தப்பா புருச்சிகிட்டேக நீங்கள் பதில் சொன்னது போல அவர்களும் அவர்களுக்கு தெரிந்த பதிலை சொன்னார்கள் அதற்க்கு செய்து தருகிறேன் என்று சொல்லத்தான் முடியும் இல்லை நான் செய்யமாட்டேன் என்று சொல்லமுடியுமா பண்றமோ இல்லையோ என் கேள்விக்கு பதில் சொனார்கள் என்னை மதித்து அதர்க்கு நான் அவர்களை மதிக்க வேண்டும் நீங்கள் சொல்வது போல பொழுது போக்க நான் கேள்வி கேட்கவில்லை நான் யார் மனதும் கஷ்டப்படும்படி பேசமாட்டான் ஏன்னா அது எவ்ளவு கஷ்டமா இருக்குன்னு என்னக்கு புரியும் மேடம் உங்களுக்கு தப்பா இருந்தா என்ன சாரி நா உங்களை ரொம்ப புதிசாலின்னு நெனச்ச எப்படி தப்பா புருஞ்சி இப்பெகன்னு நனிகளை அனைத்து தோழிகளும் சொல்வதை கேட்டு எல்லாவற்றை செய்யமுடியுமா எல்லாவற்றை கேட்டு வீடில் உள்ளவர்களிடம் சொன்னால் அவர்கள் பதில் சொல்வார்கள் நான் என்ன தனி தனியாகவா கேள்வி கேட்டேன் ஒரு முறை தான் பொதுவாக கேட்டேன் நீங்கள் பதில் சொன்னது போல அவர்களும் அவர்களுக்கு தெரிந்த பதிலை சொன்னார்கள் அதற்க்கு செய்து தருகிறேன் என்று சொல்லி நன்றி சொன்னது ஒரு தப்பா மேடம் இதில் அனைத்து தோழிகளின் கலதாய்வு நடக்கிறது ஒருத்தர் மட்டும் பதில் சொல்லுங்கள் என்று சொல்லமுடியுமா நீங்கள் எப்படி ஒரு தோழியோ அப்படி தான் அனைவரும் தோழி நீங்கள் இப்படி சொன்னது என்னக்கு மிகவும் மன வேதனை அளிக்கிறது கஷ்டமாக உள்ளது நான் தவறு செய்யவில்லை உங்களுக்கு தப்பா இருந்தா சாரி மேடம் ஆனால் பொழுது போக்க நான் கேள்வி கேட்பதாக இனி தயவு செய்து சொல்லாதீர்கள் Plz

சாரி கண்ணா. மன்னிச்சுக்கங்க. :-( http://www.arusuvai.com/tamil/node/34439 த்ரெட்ல வந்த பானுவையும் உங்களையும் ஒரே ஆள்னு நினைச்சுட்டேன். ஒரே த்ரெட்ல லைன்ல தனித் தனி போஸ்ட்டா கேள்விகள் வைச்சிருந்தாங்க. ரெண்டு பேர் ஒரே கேள்வியை இரண்டு த்ரெட்ல வைச்சிருந்தாங்க. சரியா புரிஞ்சுக்காம நான் லூசு மாதிரி இடைல ஏதாவது சொல்லிக் குழப்பிருவேன். சாரி. :-( என்னால நீங்க இங்க கேள்வி கேட்கிறதை விட்டுராதீங்க. உங்களைப் போன்ற சகோதரிகளின் சந்தேகங்களுக்கு உதவத் தான் அறுசுவை மன்றமே இருக்கிறது. என்ன சந்தேகம் என்றாலும் கேளுங்க. இமா சொன்னதை கண்டுக்காதீங்க. மன்னிச்சுக்கங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்