குழந்தைக்காக

என் பையனுக்கு 5 வயது L.K.G படிக்கிறான். ஆரம்பத்தில் நன்றாக படித்து கொண்டிருன்தான். போக போக படிப்பில் கவனம் குறைன்து விட்டது. home work kum சரியாக செய்வதில்லை மிகவும் மெதுவாக எழுதுகிறான். பார்த்து எழுதுவதில் கோட தவறு செய்கிறான். spelling சொல்லிகிறான் அதுவும் திக்கி திக்கி அதையே எழுத சொனால் யெழுதுவதில்லை. பள்ளியிலும் அப்படி தான், இதனால் எனக்கு கோவம் அதிகமாகி ரொம்ப அடித்து விடுகிறேன். அவன் அழுவதை பார்த்தால் பாவமாக உள்ளது. ஆனால் கோவத்தை control செய்ய முடிவதில்லை. எல்லோரும் அவன் smart இல்லை என்கிறார்கள். அதற்க்கு நான் அடித்தது தான் காரணமோ என்று குற்ற உணர்ச்சியாக உள்ளது. அவன் எதையும் நியாபகம் வைத்துக் கொள்ள மாட்டெகிறான். ஒரே பையன் அவன் கேட்பதெல்லாம் செய்கிறோம். அவன் சன்தோசமாக இருக்கத்தான் ஆனால் அவன் செய்வதை பார்த்தால் இனி அவனுக்கு எதுவும் செஇய வேண்டாம் என்று தோன்றுகிறது. படிப்பில் கொஞ்சம் கூட interest இல்லை. பதாம், வால்னட் என்று எல்லாம் கொடுக்கிறேன். மூளை வளர்ச்சி 6 வயது வரைதான் என்கிறார்கள் அது வேறு பயமாக உள்ளது. அவன் சுறுசுறுப்பாக என்ன செய்வது, என் கொவத்தை எப்படி கட்டுபடுத்துவது

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. எனக்கு தெரிஞ்சதை சொல்றேன். முதல்ல அவனை அடிக்காதீங்க. அடிச்சா அவனுக்கு படிப்பு மேல இருக்கிற ஆர்வம் குறைந்து வெறுப்பு மற்றும் பயம் வந்திரும். அவனை ஊக்க படுத்துங்கள். நீ சரியாய் பார்த்து எழுதுனா அம்மா உனக்கு பிடிச்சதை தருவேன்னு சொல்லி பாருங்க முதல்ல. படிக்க உக்காரும் போது முதல்ல அவனுக்கு அந்த நேரம் படிக்க ஆர்வம் இருக்கானு பாருங்க. விளையாட்ற பையன் இல்லையா அந்த நேரத்துல படிக்க சொன்னா அவனுக்கு விளையாட முடியலன்னு ஒரு எண்ணமும் சீக்கிரம் முடிச்சா விளையாட விடுவாங்கன்னு அவசரத்துல தப்பு தப்பா எழுதுறான். அவ்ளோ தான். உங்க பையனுக்கு ஒன்னும் இல்ல. இப்பதானே எல் கே ஜி. எல் கே ஜி க்கே அடிக்கிறிங்களா கஷ்டமா இருக்கு. போக போக சரியாகும். அவனுக்கு படிப்புல ஆர்வம் வர்ற மாதிரி சொல்லி கொடுங்க. அவன் படிக்கும் போது டிவி மொபைல் எதுவும் ஆன் ல இருக்க வேணாம். அவன் கவனத்த எது திசை திருப்புதுனு பாருங்க. அவன் தப்பு தப்பா எழுதுனா உனக்கு இப்ப படிக்க இஷ்டம் இருக்கா நீ சரியா படிச்சு எழுதுனா இன்னும் கொஞ்ச நேரம் அம்மா விளையாட விடுவேன். நானும் உன் கூட விளையாடுவேன்னு சொல்லுங்க. கண்டிப்பா புரிஞ்சுப்பான். ஸ்கூல்ல அவன் தப்பு பண்ணா தப்பு டீச்சர் மேல தான்னு நான் சொல்வேன். கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் வரும். போக போக அவனுக்கு புரியும். இந்த மாதிரி விஷயத்தை அடிச்சு திருத்த முடியாது. இது இன்ட்ரெஸ்ட் சம்பந்தப்பட்ட விஷயம். மூளை வளர்ச்சியோடு ஒப்பிடாதீங்க. அவன் போக்குல விடுங்க கூடவே அவனுக்கு சப்போர்ட் பண்ணுங்க.. நல்ல ஆகாரம் முக்கியம் தான் அதுக்காக ஆகாரம் குடுத்தா படிப்பான் மூளை வளர்ச்சிக்கு உதவும்னு சொல்றது உங்க பையன் விஷயத்துல ஒத்து வராது. உங்க கோவத்தை கட்டுப்படுத்துங்க. கோபம் வரும்போது அந்த இடத்துல இருந்து விலகி போயிடுங்க. அடிக்கலாம் ஆனா நீங்க ரொம்ப அடிக்கிறதா சொல்லிருக்கீங்க. பார்த்துக்கோங்க.

- பிரேமா

Ennappa lkg padikkira paiyannukku eluta teriyala padikka teriyala nnu adikkireenga.en ponnum lkg.5 years aagutu.oru nal kooda home work pannatu ella.nan tan panren.home work pannunu sonna" amma school la tan nan elutuven.enga nee tan pannanum sollutu.neenga lkg padikkira paiyana Patti evlo kavalappadateenga.adikkateenga. freeya vidunga.tane sari aayidum.

சங்கீதா, ஷகிலா உங்களிடம் தான்..
ஐந்து வயதில் முதல் வகுப்பு தானே படிக்க வேண்டும்.. இல்லை ukg படிக்க வேண்டும்..
நீங்கள் ஐந்து வயதில் lkgபடிக்க வைத்த காரணம் என்ன.. இல்லை நான் தான் தவறாக புரிந்து கொண்டேனா?

பிரேமா சொல்வது போல் அடித்தால் வேலைக்கு ஆகாது.. உங்களுக்கு பொறுமை இல்லை என்றால் tuition சேர்த்து விடுங்கள்.. அங்கு குழந்தை homework முடித்துவிட்டு வீட்டில் ரிலாக்ஸாஸாக விளையாடுவார்கள்..

31/2 vayasula sekkaratukku patila 4 vayasula sekka vendiyata possu. Yenna June start aagum potu 4vayasu.eppo lkg mudiya pogum potu 5 vayasu.

5 வயது இல்லை, 10, 13 வயசுக் குழந்தைகளுக்கும் படிப்பை விட விளையாட்டில் தான் கவனம் அதிகம் இருக்கும். நீங்க சொன்ன மெதுவாக எழுதுறது குழந்தை வேண்டும் என்று செய்யும் விஷயம் இல்லை. அது குழந்தை. நீங்க ஒரு குழந்தையையைத் தான் பெற்று இருக்கிறீங்க; மாணவனை இல்லை. அவனாவது 5 வயசுக் குழந்தை, எழுதுறதைத் தவறா எழுதுறான். உங்களுக்கு எத்தனை வயசு? உங்க போஸ்ட்ல குறைந்தது 13 பிழைகள் இருக்கின்றன. அதற்கு மேல் பெரிய பிழை, குழந்தையைக் குழந்தையாகப் பாவிக்காமல் பெரியவனாகப் பார்ப்பது. முதலில் உங்கள் பிழைகளைத் திருத்துங்கள். உங்களால் முடியாததைக் குழந்தையிடம் எதிர்பார்க்கலாமா? ஸ்பெல்லிங்... பெரியவர்களுக்கே சிரமம். இதையெல்லாம் இப்போ திணித்தால்... எப்போது விளையாட நேரம் கொடுப்பீர்கள்? அவன் வேலை பார்க்க ஆரம்பித்த பின்பா? அடிப்பது இப்போது பல நாடுகளில் சட்டப்படி குற்றம். இங்கேயானால் உள்ளே போட்டுட்டு குழந்தையை கூட்டிப் போய் வேறு பராமரிப்பில் விட்டுருவாங்க. 'எல்லோரும்' உங்கள் பையனை ஸ்மார்ட் என்று சொல்ல வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தெரிகிறது. ஆசிரியர் கூட அதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் ஏதாவது பிரச்சினை என்று தெரிந்தால் சொல்லாமலிருக்கவும் கூடாது. மற்றவர்கள் பற்றி என்ன சொல்வது! நீங்களே அவனை ஸ்மார்ட் இல்லை என்று தானே நினைக்கிறீர்கள்! குழந்தைக்கு ஆயிரம் நல்ல ஆசிரியர்கள் கிடைக்கலாம்; அம்மா, நீங்கள் மட்டும் தான். உங்கள் மேல் பயம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவன் சந்தோஷமாக இருக்க, அவன் கேட்பதெல்லாம் செய்வதாகச் சொல்வது... பொய் என்பது உங்களுக்கே தெரியும். ;-) அவன் சந்தோஷம் விளையாட்டு. அதை நீங்கள் கொடுக்கவில்லை; மறுக்கிறீர்கள். 'இனி எதுவும் செய்ய வேன்டாம் என்று தோன்றுகிறதா? நீங்கள் வியாபாரி அல்ல. தாய், குழந்தை உறவு பண்ட மாற்று வியாபாரம் அல்ல. 6 வயது வரை தான் மூளை வளார்ச்சி என்று யாரோ சொன்னதை நம்பி டென்ஷனை குழந்தை மேல் காட்டுகிறீர்களா? ;-) அவன் சுறுசுறுப்பாக வேண்டுமா அல்லவா என்பதை நான் பார்க்காமல் நீங்கள் சொல்வதை மட்டும் நம்பி எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால் நீங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி ஒன்று சொல்வேன். கோபப்படுங்கள்... உங்கள் மேல்; குழந்தை மேல் வேண்டாம். உங்களால் உங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லையெனும் போது குழந்தையால் தன் இயல்பு மாறி நடக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இன்னும் காலம் இருக்கிறது. திணிக்க வேண்டாமே!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்