Alosanai thevai

.

*

நீங்கள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறீர்கள்..
25 வயது தான் ஆகின்றன.. சிலர் இன்னும் வாழ்க்கவாழ்க்கையை தொடங்கி கூட இருக்க மாட்டார்கள்..
இந்த வயதில் நாட்டம் இல்லை என்று சொல்வது சரியில்லை என்று தான் தோன்றுகிறது..
கணவரை நினைத்து பார்க்கலாம்..
அதை விட இது உங்களுக்கு வாழ வேண்டிய வயது..
சந்தோஷமாக வாழுங்கள்..
இது என்னுடைய கருத்து..
நிச்சயம் நீங்கள் கணவருக்கு நேரம் ஒதுக்கி தான் ஆக வேண்டும்.. உங்கள் வயது தான் எனக்கும் என் கணவருக்கு 32 தான்..
என் அனுபவத்தில் இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை..
மகிழ்ச்சியாக இல்லற வாழ்வில் ஈடுபடலாம்..
குழந்தைகள் உறங்க சற்று நேரம் ஆகலாம்.. இருவரும் தாமதமாக காத்திருக்கலாம்.. நாங்கள் தினமும் உடலுறவில் ஈடுபடுவது இல்லை.. ஆனால் குழந்தை தூங்கியவுடன் அரை மணி நேரமாவது பேசிவிட்டு தான் தூங்குவோம்..
கொஞ்சம் யோசித்து பாருங்கள்..
உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டி என் கருத்தை பதிவு செய்து உள்ளேன்..
என்னடா இங்கே எனக்கு சாதகமாக பதில் வரவில்லை என்று யோசிக்க வேண்டாம்..
வாழ்வதற்கு தான் வாழ்க்கை..

*

முதலில்... இரண்டு வருடங்கள் இடைவெளி விட்டிருக்கத் தேவையே இல்லை. நீங்கள் சொன்ன வலியும் இரத்தமும் (அளவு சொல்லவில்லை நீங்கள். சில துளிகள் மட்டும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.) முன்பு இருந்திராத காரணத்தால் 'நார்மல்' என முடியாது. இப்படிச் சொன்னதால் பெரிய பிரச்சினை என்று நினைக்காதீர்கள்.

இடைவெளி விட்டதற்கான காரணம் என்ன என்று சொல்லவில்லை நீங்கள். உங்கள் வலி... மனம் சார்ந்தது என்று தோன்றுகிறது. உங்களுக்கு முழுமையான ஈடுபாடு இல்லை; தவிர்க்க விரும்புகிறது மனது எனும் போது, உடல் விட்டுக் கொடுக்காது. வலி இருக்கும். நீங்கள் உடலை இறுக்கமாக வைத்திருந்த காரணத்தால் சில துளி இரத்தம் வந்திருக்கும். (நீங்கள் சேர்ந்த நாள் மாதவிலக்குக்குச் சமீபமாக சில நாட்கள் முன்பின்னாக இருந்தும் இருக்கலாம்.)

நீங்கள் மூன்றாவது இயல்பான பிரசவம் என்றிருந்தீர்களானால் வலிக்குக் காரணம் வேறு இருக்கும் என்று ஊகிக்கலாம். சீசேரியன் என்பதால் எந்தப் பிரச்சினையையும் தொடர்பு படுத்திச் சிந்திக்கத் தோன்றவில்லை. முதல் இரண்டு பிரசவங்களின் போது போட்ட தையல் இனிப் பாதிப்பைக் கொடுக்காது. அதன் பின் தானே மூன்றாவது தடவை கர்ப்பம் ஆகி இருக்கிறீர்கள்? எனெவே அதைப் பற்றிய கவலையை இனி விட்டுவிடுங்கள். அது எல்லோருக்கும் தேவைப்படும் தையல்தான்.

'ஃபாமிலி ப்ளானிங்' என்றால் எப்படி? சத்திரசிகிச்சையைச் சொல்கிறீர்களா? அல்லது 'காப்படர் டீ' அப்படி ஏதாவதா? உங்களுக்கு இஷ்டம் இல்லாமல் கணவருக்காகவோ வீட்டாருக்காகவோ செய்துகொண்டீர்களா?

நீங்கள் 'ப்ராப்ளம்' என்கிறீர்கள். எனக்கு நீங்கள் 'ப்ராப்ளம்' என்று குறிப்பிடுவது ப்ராப்ளமாகவே தோன்றவில்லை; உங்கள் மனம் - நீங்கள் தான் ப்ராப்ளமாக இருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

குழந்தைகள் கவனிக்காமலிருந்தால் தான் யோசிக்க வேண்டும். கவனிப்பதில் என்ன பிரச்சினை???? புரியவில்லை?

உங்கள் கணவர் கூறுவதைப் பற்றி யோசிக்க வேண்டாம். காரணம் நீங்கள் விட்ட இடைவெளி. அதனால் சொல்கிறார். புரிந்துகொள்ளுங்கள். இனி இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் மனம் கோணாமல் நடவுங்கள். உங்கள் கணவர் திடீரென்று மாறவில்லை. உங்கள் செய்கையால் மெதுவே மாறியிருக்கிறார். பிரசவத்தின் பின் இரண்டு வருட இடைவெளி விட்டீர்கள் எனும் போது, அதன் முன்பாக கர்ப்ப காலத்திலும் ஒத்துழைத்திருக்க மாட்டீர்களோவென்று தோன்றுகிறது. இரண்டரை வருடங்கள்!! ஆண்கள், பெண்களைப் போல் அல்ல. அவர்கள் ஹோர்மோன்கள் கிழவராகி மறையும் கடைசிக் காலம் வரை தொழிற்படும். நீங்கள் 31, 32 வயதிலே ஒதுக்கி வைக்க முனைந்ததால் விளைவைச் சந்திக்கிறீர்கள். பக்கத்தில் இருக்கும் போதே பட்டினி போடுகிறீர்கள். அதனால் தூர அனுப்பச் சிந்திக்கிறார். உங்கள் பிரச்சினை குழந்தைகள் என்பதாக முதலாவது பதிவில் சொன்னீர்கள். அவர் சொல்வது போல குழந்தைகளை அம்மாவிடம் அனுப்பி வையுங்கள். உங்கள் இருவருக்கும் சமாதானம் ஆகிக் கொள்ள தனிமை கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு இருவரும் மனம் விட்டுப் பேசினால் எல்லாம் சரியாகிவிடும். நாத்தனார் உங்களுக்கு ஆதரவாகப் பேச நினைத்திருக்கிறார். ஆனால் அது உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு ஆகாது. அவர் சொன்னதை நம்பி உங்கள் கணவர் பிரச்சினை செய்வதாக நம்ப வேண்டாம். முதலில் மாறியது நீங்கள் அல்லவா?

நாட்டம் இல்லை என்பதை நீங்கள் சொல்லும் முன்பே புரிந்து கொண்டேன்.

உங்கள் மனநிலைக்கும் காரணம் ஹோர்மோன்களாக இருக்கலாம். ஒரு பெண் மருத்துவரைப் பாருங்கள்; உங்கள் பிரச்சினையைச் சொல்லுங்கள். தீர்வு சொல்லுவார். வலியும் நீங்கள் சொன்ன இரத்தம் வருவதும் உங்கள் மனதும் ஹோர்மோன்களும் ஒழுங்காக, தானாகச் சரியாகும். நீங்கள் கிழவி அல்ல; உங்கள் கணவரும் கிழவர் அல்ல. இப்படியே விட்டுவைப்பது சரியில்லை. எந்தச் சாக்கும் சொல்லாமல் இன்றோ நாளையோ மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது. நீங்களும் உங்கள் கணவரும் சந்தோஷமாக இருந்தால்தானே உங்கள் குழந்தைகளை நன்றாக வளர்க்க முடியும்? போய்ப் பேசுங்க.

‍- இமா க்றிஸ்

*

*

உங்களுக்கு மூன்றாவது பெண் குழந்தை தானே.. நாம் அடிக்கடி பேசி இருக்கிறோமே..அந்த சுவாதி தானே நீங்கள்..
குழந்தைகள் முன் சண்டை வராத வரை பார்த்து கொள்ளுங்கள்..
குழந்தைகள் சண்டைகளை பார்க்க பார்க்க வாழ்க்கவாழ்க்கையை வெறுத்து விடுவார்கள்..
நிச்சயம் நீங்கள் இருவரும் விட்டு கொடுத்து வாழ வேண்டும்..
சண்டை எதனால் வருகிறது? குழந்தைகள் இருக்கும் வீட்டில் தனிமை கிடையாது என்று இருப்பது இல்லை..
தனிமை நாம் உருவாக்கி கொள்ள வேண்டுடும்
நீங்கள் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் குழந்தகுழந்தைக்கு நிம்மதியான உறக்கம் இல்லை என்பது புரிகிறது..
முதலில் சண்டை போடுவதை தவிர்த்து விடுங்கள்..
இருவரும் மனம் விட்டு பேசுங்கள்.குழந்தைதைக்கு நல்ல சூழல் உருவாக்கி கொடுங்கள்..
எல்லாம் சரியாக வரும்..

சண்டை போட உங்கள் கணவர் தப்பு எதுவுமே செய்வதாக எனக்குத் தோன்றவில்லை.

குழந்தைகள் என்றால் குறும்பாகத் தான் இருப்பார்கள்; அப்படித்தான் இருக்க வெண்டும். அவர்கள் தனியே தூங்க மாட்டார்கள் என்பது இல்லை. அதை உங்களுக்குக் கவசமாக நீங்கள் இரண்டு வருடங்களாகப் பயன்படுத்தினீர்கள், இப்போதும் அதைத் தொடர முனைகிறீர்கள். கடைசி இரண்டு பிரசவ சமயமும் குழந்தைகளை உங்களோடு மருத்துவமனையில் வைத்தா இருந்தீர்கள்? இல்லை அல்லவா? அப்போ உங்களை விட்டு இருந்தவர்கள் இப்போ இருக்க மாட்டார்களா? நீங்கள் நினைத்திருந்தால் பழக்கி இருக்க முடியும். மனம் உண்டானால் இடம் உண்டு.

நான் முன்பே சொன்னேன் சாக்குகள் சொல்ல வேண்டாம் என்று. ஒரு பழமொழி சொல்லுவாங்க, 'குதிரைக்கு நீரைக் காட்டலாம்; ஆனால் அது தானாகத் தான் குடித்தாக வேண்டும்.' இந்துவும் நானும் சொல்வதைச் சொல்லிவிட்டோம். எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. உங்கள் வாழ்க்கை; உங்கள் இஷ்டம்.

‍- இமா க்றிஸ்

*

மேலும் சில பதிவுகள்