கஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா

கிட்ட தட்ட இரண்டு வாரமாக என் முகத்தில் அதிகமான பருக்கள் வந்து முகமே அசிங்கமாக தெரிந்தது, அதனால் என் பெரியம்மா சொன்னது போல் கஸ்தூரி மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தேய்த்தேன், அதை முகத்தில் அப்பிளை செய்யும் போதே முகம் சரியாக எறிந்தது, அப்படி தான் இருக்கும் போல என முழுதாக முகத்தில் பூசி விட்டு பதினைந்து நிமிடத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் நீரில் முகத்தை கழுவி விட்டன், இப்பொழுது முகம் கழுவிய பிறகும் முகம் அதிகமாக எரிகிறது, கஸ்தூரி மஞ்சள் போட்டால் இப்படி தான் எறியுமா, எனக்கு பயமாக இருக்கிறது, தயவு செய்து பதில் தாருஙகள் பிரண்ட்ஸ்,

கஸ்தூரி மஞ்சள் எரிச்சலைக் கொடுப்பதில்லை. ஆனால் உங்கள் சருமம் மிக மென்மையானதாக இருக்கலாம் அல்லது பருக்கள் உடைந்த காயம் ஆறாமல் இருந்ததால் வந்த எரிச்சலாகவும் இருக்கலாம். எல்லோருக்கும் எல்லாம் ஒத்துக் கொள்வது இல்லை. 'ரோஸ்வாட்டர்' சரியில்லாமல் இருந்திருக்கலாம். நீங்கள் மஞ்சளை உரைத்த / அரைத்த இடம் அல்லது குழைக்கப் பயன்படுத்திய பாத்திரம் ஏற்கனவே காரமான பண்டம் எதாவது ஒன்றோடு தொடர்பானதாக இருந்திருக்கலாம். பயப்பட எதுவும் இல்லை. சரியான காரணம் தெரியும் வரை பயன்படுத்தாதீர்கள்.

‍- இமா க்றிஸ்

மஞ்சள் சூடு. எனக்கும் ஒத்துக்காது எரியும்.தும்மல் வரும். தவிர்த்து விடவும்

மேலும் சில பதிவுகள்