40நாள் குழந்தைக்கு சளி

எனது குழந்தைக்கு 40நாள் ஆகிறது . ஆனால் அவன் சரியாக தூங்குவதும் இல்லை பால் குடிப்பதும் இல்லை . அவன் தூங்கும் போது சத்தம் வருகிறது , எனது சந்தேகம் என்னவெனில் அது சளியா? அது தான் அவன் சரியாக தூங்குவதும் இல்லை பால் குடிப்பதும் இல்லயா? எனக்கு சளியை குணமாக்க மருந்து சொல்லுங்களேன் please???

தூக்கம் ஒழுங்குக்கு வர நாள் ஆகும். பால் போதாமலிருப்பதால் கூட தூக்கம் இல்லாமலிருக்கலாம். குழந்தை சரியாக மார்பில் பற்றிக் கொள்ளாவிட்டால் பால் போதிய அளவு கிடைக்காது. இதைக் கவனிப்பீர்களானால் மீதி எல்லாம் சரியாகும் என்று நினைக்கிறேன்.

சளியாக இராது. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சுவாசக் குழாய் சற்று சிறிதாக இருக்கும். அதனால் அந்தச் சத்தம் வரலாம். இது காலப்போக்கில் இல்லாமல் போகும். ஆனால், உங்களுக்கு யோசனையாக இருந்தால் எங்கள் பதிலை நம்பிக்கொண்டு இராமல் மருத்துவரைப் பார்ப்பதுதான் நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்