வளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா?

இப்பொழுது நான் நான்கு மாத கர்ப்பம். எனது உறவினர் வீட்டு பெண் ஒருவரின் வளைகாப்பு நிகழ்ச்சிற்கு நான் செல்லாமா? பதிலுக்காக காத்திருக்கிறேன்

நீங்க ஒரு நல்ல நிகழ்வுக்குத் தானே போறீங்க! அது உங்களைச் சந்தோஷப்படுத்துமே தவிர எந்த விதத்திலும் பாதிக்காது. போகலாம்.

உங்களை இன்வைட் பண்ணி இருக்காங்க; போகப் போறீங்க. போகாட்டா தான் தப்பு. அவங்க அழைப்புக்கு மரியாதை கொடுக்கணும். போகாட்டா அவங்க மனம் நோக மாட்டாங்களா?

நீங்களும் கர்ப்பம். நீங்க அவங்க இடத்துல இருந்து அவங்க உங்க இடத்துல இருந்தா அவங்க என்ன செய்யணும் / செய்யக் கூடாது என்று எதிர்பார்ப்பீங்க? ம்ஹும்! என்ன செய்தா / செய்யாவிட்டால் உங்களுக்கு மனம் வருந்தும்? யோசிச்சுப் பாருங்க.

உங்களுக்கு வளைகாப்பு முடிஞ்சுதா? அவங்களை அழைக்க மாட்டீங்களா? இப்போ போகாட்டா நீங்க எப்படி வருந்தி வருந்தி அழைச்சாலும் அவங்க வரணும் என்று எதிர்பார்க்க முடியாது.

உங்களுக்கு உண்மைலயே முடியாம இருந்தா அவங்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டு இருங்க. புரிஞ்சுப்பாங்க. முடியுமானால் போகலாம். போனப்புறம் ரொம்ப நேரம் இருக்க முடியலைன்னா அவங்க வீட்டார் யார்ட்டயாச்சும் சொல்லிக் கொண்டு கிளம்பலாம். புரிஞ்சுக்கணும் அவங்க. இல்ல, புரிஞ்சுக்கவே முடியாதவங்க என்றால் (அப்படியான மனிதர்களும் இருக்கிறார்கள். அனுபவம். :-) ) உங்க நலனை மட்டும் பார்க்க வேண்டியது தான்.

நீங்க 'நம்பிக்கை' என்பதன் அடிப்படையில் கேள்வி கேட்டிருக்கீங்க என்றால் என் பதில் பொருத்தமில்லாதிருக்கும். இடக்குப் பிடிச்ச பதிலாகத் தெரியும். :-)

சந்தோஷமா இருங்க. உங்களுக்கு சந்தோஷம் கொடுக்கிறதைச் செய்யுங்க.

‍- இமா க்றிஸ்

எங்கள் ஊர் பக்கம் இந்த வழக்கம் .அதாவது கர்ப்பிணி நாத்தனார் அல்லது அவர்களுக்கு நீங்கள் நாத்தனாராக இருந்தால் கர்ப்ப காலம் முடியும் வரை ஒருவரையொருவர் பார்க்க கூடாது (இங்கு அது சாத்தியம் உங்களுக்கு எப்படி என் தெரியவில்லை). மற்ற படி வேறு உறவுமுறை பெண்ணாக இருந்தால் பிரச்சினை இல்லை.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

உங்கள் அறிவுரைக்கு நன்றி தோழிகளே

மேலும் சில பதிவுகள்