Hai sisters.eanakku wedding aagi oru varusam agudhu but baby visayathula romba kawanama irundho ippo 3 month a eanakku period aagala na pragnata irukkenu thonudhu eangalukku ippo kulandhai pethuka mudiyadha situation yena na innu padikkanu na pragnata agita eanda kanave kalanchiru plzzz help pannunga sagodharigale
நிர்ஷானா
தலைப்பாக 'ப்ரெக்னன்சி ப்ராப்ளம்' என்று போட்டிருக்கிறீங்க. :-) பலருக்கு ஆகவில்லை என்பதுதான் ப்ராப்ளம் ஆக இருக்கிறது.
இந்தக் கேள்வியை முதலாம் மாதம் வைத்திருக்க வேண்டும் நீங்கள். மூன்று மாதங்கள் ஆகும் வரை என்ன செய்தீர்கள்!!
ஹோம் ப்ரெக்னன்சி டெஸ்ட் செய்து பார்த்தீர்களா? மருத்துவரைப் பார்த்தீர்களா? இவற்றை முதலில் செய்யுங்கள். கர்ப்பம் இல்லையென்றால், முறையான கருத்தடை முறை ஒன்றைப் பின்பற்றுங்கள். மாதச்சுழற்சி சரியாக சிகிச்சை எடுங்கள். சந்தோஷமாகப் படித்து உங்கள் கனவு நனவானதன் பின் கர்ப்பத்திற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் மருத்துவரிடமே இதற்கான ஆலோசனையைப் பெறலாம்.
அல்லாமல், இப்போது நீங்கள் கர்ப்பம் என்றால், மூன்று மாதங்கள் கழித்து... பேசாமல் ஏற்றுக் கொள்வது நல்லது. கர்ப்பம் என்பதற்கு மேல் அது உங்கள் இருவரதும் குழந்தை என்பதை மறக்க வேண்டாம். கருவைக் கலைப்பது, உங்கள் குழந்தையைக் கொல்லும் செயல். உங்கள் உடல் கர்ப்பத்துக்குத் தயாராக இல்லை அல்லது குழந்தை வளர்ச்சி சரியாக இல்லை என்னும் காரணங்களால் மருத்துவ ஆலோசனையோடு கருவைக் கலைப்பது வேறு, உங்கள் ஆசைகளுக்காகவும் கவனக் குறைவுக்காகவும் ஒரு உயிரைக் கலைப்பது வேறு. சிந்தியுங்கள்.
நினைத்தால் நீங்கள் குழந்தை பெற்றுக் கொண்ட பின்னால் கூட படிக்கலாம். கனவைக் கலைக்கப் போவது உங்கள் மனம்தான். அதே மனம் நினைத்தால் இரண்டையும் ஒரே சமயம் நடத்திக் காட்டும். குழந்தையால் உங்கள் கனவைக் கலைக்க இயலாது.
'கவனமாக' இருப்பது நல்ல கருத்தடை முறை ஆகாது. எம் உடல் ஒரு சுழற்சியை வைத்திருந்தாலும், அதே சுழற்சி முறை ஒவ்வொரு மாதமும் இருந்தாக வேண்டும் என்பது இல்லை. மாறலாம். நீங்கள் வேறு விதத்தில் கவனமாக இருந்திருந்தாலும், உடல் கவனமாகக் கருத்தரிக்கும். நீங்கள் வேறு ஏதாவது கருத்தடை முறையைப் பின்பற்றியிருக்க வேண்டும்.
நீங்கள் கர்ப்பமாக இல்லாமலிருக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
- இமா க்றிஸ்
Romba thanks akka eanda
Romba thanks akka eanda problatha yartayu solla mudiyama irundhe ippo eanakku theliva puriya vachitenga romba nanri
Ini eannala abortion panna
Ini eannala abortion panna mudiyadha akka plz sollungale
Ini abortion panna eadhu
Ini abortion panna eadhu problem Varuma akka
Nirshana
Ninga antha kozhanthaiya abortion panrathuku padhila antha kozhanthaiya petru eduthukalam...
Ethuva irunthalum Inga kekkurathukku padhila Dr kitta consult pannunga....
Kadavul kozhanthaiya kodukkum podhea nama vangikanum, nama kekkum podhu kedaikkathu... Ethuva irunthalum yositchi pannunga
I love my parents...
Thanks sister
Thanks sister
நிர்ஷானா
நீங்கள் இன்னும் நிச்சயமாகக் கர்ப்பம் என்று சொல்லவில்லை. செக் பண்ணிப் பார்த்தீர்களா இல்லையா?? கர்ப்பமாக இல்லாமலும் இருக்கலாம். நிச்சயம் இல்லாமல் எதற்காக இத்தனை கேள்விகள்!
மருத்துவரிடம் போய் எல்லாச் சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளுவது தான் சிறந்தது.
கர்ப்பமாக இருந்தால், மூன்று மாதக் குழந்தையைக் கலைக்க முடியுமா என்கிறீர்கள்! அது வெறும் கரு அல்ல, உங்கள் குழந்தை என்பதை, எடுத்துச் சொன்ன பின்னாலும் புரிந்துகொள்ளவில்லயா நீங்கள்! குழந்தையாக இருந்தாலும் கலைத்தே ஆவது என்று முடிவாக இருக்கிறீர்கள். கலைத்தால் உங்களுக்கு என்ன ஆகும் என்று கேட்கிறீர்களா? அது நீங்கள் தெரிவு செய்யும் முறையைப் பொறுத்தது. இதற்கு மேல் நீங்களாக எதையும் செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இரத்தப் போக்கு அதிகமாகி விட்டால், அதற்காக மருத்துவரை நாடவேண்டும். எனவே முன்பாகவே மருத்துவர் உதவியை நாடுவது மிகமிக அவசியம். சிலசமயம் நீங்கள் சிகிச்சையிலிருந்து மீள சில வாரங்கள் ஆகலாம். உங்கள் படிப்பை இந்தக் காலமும் இயலாமையும் குழப்பலாம்.
இன்னொரு சமயம், நீங்களாக குழந்தைக்கு முயற்சி செய்யும் சமயம் சட்டென்று கரு தங்கி விடும் என்பது இல்லை. இப்படிச் செய்தோமே என்று அப்போது கவலைப்பட நேரலாம்.
- இமா க்றிஸ்
Ama Akka indaiku tha test
Ama Akka indaiku tha test panne positive kaattudhu
நிர்ஷானா
நீங்கள் எடுக்கும் முடிவு இரண்டில் எதுவாக இருந்தாலும் மருத்துவரைக் காண்பது அவசியம்.
- இமா க்றிஸ்