தேங்காய் சேர்க்காமல் குழம்பு

ஹலோ தோழிகளே

தேங்காய் சேர்க்காமல் குழம்பு திக்காக வர என்ன செய்ய வேண்டும். எப்பொழுதும் நான் தக்காளி அரைத்து தான் செய்வேன். தேங்காய் சேர்க்காமல் 1, 2 குழம்பு தான் நன்றாக வருகிறது. மற்ற குழம்புகள் அளவு கம்மியாகவும் சுவை இல்லாமலும் இருக்கிறது.தேங்காய் சேர்க்காமல் குழம்பு திக்காக வர என்ன செய்ய வேண்டும்

இறைச்சி வகைகளுக்கும் றால் & சிங்கறாலுக்கு - கிழங்கு அவித்து மசித்துச் சேர்த்தால் தடிப்பாக மட்டுமல்லாமல் சுவையாகவும் இருக்கும். நண்டுக்கு வறுத்த அரிசிமா சேர்த்தால் சுவையாக இருக்கும். காலிஃப்ளார், பஜ்ஜி மிளகாய், லீக்ஸ், மட்டி போன்றவை வெள்ளைக்கறியாக வைக்கும் போது கிழங்கு அவித்து மசித்துச் சேர்க்கலாம். குழம்பு க்ரீமியாக வரவேண்டுமானால், கடைசியாக கார்ன்ஃப்ளார் கொஞ்சம் நீரில் கரைத்துக் கலந்துவிடலாம். இந்திய சமையல்கள் பலவற்றில் தடிப்பாகக் குழம்பு வருவதற்காக கடலைமா தூவி இறக்குவார்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்