தைராய்டு அறிகுறிகள்

தைராய்டு அறிகுறிகள் தெரிந்தவர்கள் கூறவும்

அறிகுறிகள் இன்னதுதான் என்று திடமாகச் சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கு ஒரு விதமாக இருக்கும்.

நான் எந்தச் சிரமத்தையும் அனுபவித்ததாக நினைவில் இல்லை. என் சின்ன மகன் - அப்போது பதினொரு வயது - அவருக்காக மருத்துவரிடம் போன போது, 'மம்மி காரணம் ஒன்றும் இல்லாததற்கெல்லாம் கோபிக்கிறாங்க. கொஞ்சம் ப்ளட் டெஸ்ட் பண்ணிப் பாருங்க,' என்று மருத்துவரிடம் சொன்னார். :-) கோபிக்கிறதையெல்லாம் அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியாது அல்லவா! ஆனாலும் சின்னவர் ஆறுதலுக்காகவும், நான் அதுவரை ஒரு முழுமையான பரிசோதனை செய்திராததாலும் மருத்துவரர் இரத்தப் பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்தார். இத்தனைக்கும் நான் அப்படி ஒன்றும் பெருங்கோபி அல்ல. அப்படி தற்செயலாகக் கண்டுபிடித்தது தான். எனக்கு வெகு காலமாக இருந்திருக்கும் என்று மருந்துவர் அபிப்பிராயம் சொன்னார். அந்தக் கோபிக்கும் குணம் மாத்திரைகள் எடுக்க ஆரம்பித்தபின் நிறையவே குறைந்து போயிற்று. இப்போது, 'காரணத்தோடு' சிரித்த முகமாகக் கோபிக்கிறேன். :-) காலப் போக்கில் வேறு சில மாற்றங்களையும் அவதானித்தேன். ஆனாலும் அவை எவையும் அறிகுறிகள் என்று யாருக்காவது சொல்லக் கூடியவையாக இல்லை. அத்தனை சாதாரணமானவை.

உங்களுக்கு சந்தேகமிருந்தால், சுலபமான வழி இரத்தப் பரிசோதனை. வழி உள்ள போது வைத்துக் கொண்டு கவலைப்படுவானேன்!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்