அதிக பசி

ஹலோ தோழிகளே
எனக்கு வயது 31. 3 வருடங்களுக்கு முன் தைராட்டு வந்தது சிகிச்சை எடுத்து கொண்டேன் கொஞ்ச நாளிலேயே சரியாகிவிட்டது ஆனால் மாத்திரை குடித்து கொண்டே இருக்க வேண்டும் என்றார்கள் 25 mg குடித்து கொண்டிருக்கிறேன் ஆனாலும் உடல் எடை அதிகரித்து விட்டது diet excersice பண்ணாலும் கிராம் கணக்கில் தான் எடை குறைகிறது ஏறும்போது மட்டும் ஒரு நாளுக்கு ஒரு கிலோ ஏறுகிறது அதற்கு காரணம் அதிக பசி 3 பெரிய பெரிய சப்பாத்தி சாப்பிட்டாலும் பசி அடங்குவதில்லை நேற்றெல்லாம் இரவு 3 சப்பாத்தி 2 முறை சாதம் சாப்பிட்ட பிறகும் பசி அடங்கவில்லை பசிக்காக கவலை படுவதா எடைக்காக கவலை படுவதா என்றே தெரியவில்லை வேலைக்கு வேறு செல்கிறேன் என் பணி உட்கார்ந்தே செய்வது தான் இடையில் நடக்கவும் செய்கிறேன் எடை கூட பிரச்சனை இல்லை எனக்கு பசியை கட்டுக்குள் கொண்டு வந்தால் எடை தானாக குறையும் அல்லது ஏறாமலாவது இருக்கும் பசியை அடக்க என்ன செய்வது

//காரணம் அதிக பசி 3 பெரிய பெரிய சப்பாத்தி சாப்பிட்டாலும் பசி அடங்குவதில்லை நேற்றெல்லாம் இரவு 3 சப்பாத்தி 2 முறை சாதம் சாப்பிட்ட பிறகும் பசி அடங்கவில்லை// உங்கள் பிரச்சினை பசி அல்ல. அதை அடக்க நீங்கள் சாப்பிடுவதுதான் பிரச்சினையாகத் தெரிகிறது.

பசித்தால் மாப்பொருள், இனிப்பு, எண்ணெய் சார்ந்த உணவுகளை எடுக்க வேண்டாம். முதலில் தண்ணீர் குடியுங்கள். அதற்கு மேல், சாலட் அல்லது கலோரி குறைவான ஏதாவது சாப்பிடலாம். வயிறு நிறைந்த உணர்வு கிடைத்தால் போதும். எப்பொழுதும் பக்கத்தில் தண்ணீர் வைத்திருங்கள். பசி எடுக்க ஆரம்பித்ததும் நீர் அருந்துங்கள். தாமதிக்க விட்டால் கஷ்டமாக இருக்கும். அங்கு செலரி கிடைக்குமா? துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளுங்கள். இடையிடையே வாயில் போட்டுக்கொள்ளுங்கள். சிலர் 'பீநட் பட்டர்' தடவிச் சாப்பிடுவார்கள். அளவோடு வைத்துக்கொண்டால் பிரச்சினை இல்லை. சுவைக்காக அதிகம் தடவினால் பயனில்லை. எதிர்மாறான விளைவே கிடைக்கும். தேநீர் / காப்பி அருந்தும் போது சர்க்கரை, பால் சேர்க்க வேண்டாம்.

எந்தப் பழக்கமும் ஆரம்பத்தில்தான் சிரமம். கொஞ்ச நாள் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்துவிட்டால் பழக்கமாகி விடும்.

//கிராம் கணக்கில் தான் எடை குறைகிறது ஏறும்போது மட்டும் ஒரு நாளுக்கு ஒரு கிலோ ஏறுகிறது அதற்கு காரணம் அதிக பசி// அப்படி அல்ல. தினமும் எடை பார்ப்பீர்களா? அது சிலருக்கு எதிர்மாறான விளைவைக் கொடுக்கும். நீங்கள் சொன்ன ஒரு நாளுக்கான எடை அதிகரிப்பு, தற்காலிகமானது. அது அன்று நீங்கள் நிரப்பிக்கொண்ட உணவின் எடையைச் சேர்த்துக் காட்டும். ஏறும் எடையில் பெரும்பான்மையானது உணவின் எடையே தவிர உடலில் எடை அல்ல.

மூன்று பெரிய உணவுகளை விட, இடைக்கிடையே சிறிய அளவு உணவாகப் பிரித்து வைத்து உண்பது பலன் கொடுக்கும். இரவு உணவை நேரத்துக்கு எடுங்கள். அதன் பின் ஒரு நடை போக முடிந்தால் நல்லது.

//பசியை கட்டுக்குள் கொண்டு வந்தால் எடை தானாக குறையும் அல்லது ஏறாமலாவது இருக்கும்// உங்களுக்குப் பிரச்சினை இன்னதுதான் என்கிற விளக்கம் இருக்கிறது. //பசியை அடக்க என்ன செய்வது// அந்த உணர்வைக் கவனிக்காது விடுங்கள். அது போதும். பசித்தால் சாப்பிட வேண்டாம். ஒரு குழந்தை சாக்லெட் கேட்டால் ஒரு முறை கொடுப்போம். தொடர்ந்து கேட்டால்! அது உடலுக்கு ஆகாது என்று கொடுக்க மறுப்போம் இல்லையா! உங்கள் வயிற்றின் சொல் கேளாமல் மறுப்பீர்களானால் மெதுவே அது உங்கள் வழிக்கு வரும்.

சாப்பாட்டைக் கட்டுப்படுத்தாமல் உடற்பயிற்சி செய்வதால் பயனில்லை. செய்யக் கூடிய இன்னொரு விடயம் - மாப்பொருள் குறைவான உணவுகளை, சாதம் / சப்பாத்திக்குப் பதிலாக எடுப்பது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்