தக்காளி சட்னி

தேதி: March 10, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய வெங்காயம் - 3,
தக்காளி - 3,
காய்ந்த மிளகாய் - 6,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
பூண்டு - 4 பல்,
புளி - ஒரு நெல்லிக்காய் அளவில் பாதி,
எண்ணெய் - 1 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


 

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், பூண்டு, புளி சேர்த்து, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும்.
ஆற விட்டு, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்தவற்றை ஊற்றி சிறிது நேரம் கழித்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வியக்கா,
இன்று டின்னருக்கு இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த தக்காளி சட்னி செய்தேன். சுவை அருமை - செய்வதற்கும் எளிமை! உங்களின் குறிப்புக்கு நன்றி!!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு ஸ்ரீ,
பாராட்டுக்கு ரொம்ப நன்றி. ரொம்ப சுவையாகவும் எளிமையாகவிமிருப்பது தான் இதன் சிறப்பு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

:-)

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்வி
தக்காளி சட்னி 2முறை செய்திட்டேன்.தோசைக்கு மிகவும் டேஸ்டாக இருந்தது.மிகவும் நன்றி.

அன்புடன் பர்வீன்.

அன்பு பர்வீன்,
ஆமாம்ப்பா, தோசைக்கு ரொம்ப நல்லா இருக்கும் இந்த சட்னி. நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.