கலவை சட்னி

தேதி: March 10, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

சிறிய வெங்காயம் - 15,
தக்காளி - 2,
காய்ந்த மிளகாய் - 5,
தேங்காய் - 1/4 மூடி,
பொட்டுக்கடலை - 1 கைப்பிடி,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி,
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி,
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 ஸ்பூன்.


 

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், புளி, துருவிய தேங்காய், பொட்டுக்கடலை சேர்த்து நன்கு வதக்கிய பின் ஆற விடவும்.
ஆறிய பின் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.


இட்லி, தோசைக்கு பொருத்தமாக இருக்கும். சிறிய வெங்காயத்திற்குப் பதில் பெரிய வெங்காயமும் சேர்க்கலாம், சுவை சற்று மாறுபடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வியம்மா அவர்களுக்கு,
கலவை சட்னி மிகவும் அருமை.என் கணவருக்கு மிகவும் பிடித்திருந்தது.நன்றிம்மா
அன்புடன்,
அபி

அன்புள்ள அபி,
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் கணவருக்கு பிடித்திருந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ms selvi pls write more abt pondi special

அன்புள்ள ராஜி,
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
பாண்டில ஒண்ணே ஒண்ணு தான் ஸ்பெஷல், நீங்க எதை பற்றி கேட்கிறீர்களென்று சற்று விளக்கமாக சொல்லவும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம்,

இந்த சட்னி செய்து பார்த்தேன்.அருமை, அருமை, அருமை..... பொட்டுக்கடலைக்கு பதில் கடலைப்பருப்பு சேர்த்தேன். மீண்டும் பேசலாம். உங்களுடைய மின்னஞ்சல் முகவரி எனக்கு தரமுடியுமா?

செல்விசட்னி நன்றாக இருந்தது கடலைபருப்புக்குப்பதில் தொவரம்பருப்பு சேர்தேன் பூண்டும் சேர்தேன் நன்றி

அன்பு லட்சுமி,
நலமா? சாரி, உங்க பேரை சுருக்கிட்டேன். நிச்சயமா இந்த சட்னி நல்லா இருக்கும். எங்க வீட்டில எல்லோருக்கும் இது ஃபேவரிட் சட்னி. உங்க பாராட்டுக்கு நன்றி.
தாராளமா பேசலாம். ஐடிதானே, தர்றேனே.
senthsel@yahho.co.in
மேலே உள்ளதுதான் என்னோட ஐடி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா இன்று நான் தோசைக்கு உங்கள் கலவை சட்னிதான் சூப்பர்...வனக்கும் போதே நல்ல மனம்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்பு ரேணு,
பாராட்டுக்கு நன்றி. இது எங்கம்மா செய்யும் சட்னி. இந்த சட்னி செய்தா சின்ன வயசில நாங்களே எல்லாம் காலி பண்ணிடுவோம். வெங்காயம் வதங்கும் வாசம் மணக்கும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

திருமதி. ரேணுகா அவர்கள் தயாரித்த கலவைச் சட்னியின் படம்

<img src="files/pictures/kalavai_chutney.jpg" alt="picture" />

அன்பு ரேணு,
சட்னிய விட ஸ்பூன் அழகாம் (என் கணவர் சொன்னது).
நல்லா பண்ணி இருக்கே. பாராட்டுகள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.