முட்டை தேங்காய் பால் மசாலா

தேதி: March 11, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - 2,
தேங்காய் - 1,
சிறிய வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 6,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 ஸ்பூன்.


 

தேங்காயைத் துருவி, 1/4 லிட்டர் அளவிற்கு, தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.
முட்டையை தேங்காய் பாலில் உடைத்து ஊற்றி, உப்பு சேர்த்து, கரண்டியால் நன்றாக கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின், முட்டை பால் கலவையை ஊற்றி, கிளறிக்கொண்டே இருக்கவும்.
நன்றாக வெந்து இறுகி வரும் போது இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்