சிம்பிள் கத்தரிக்காய் பொரியல்.

தேதி: March 12, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை கத்தரிக்காய் - 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 10,
காய்ந்த மிளகாய் - 4,
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 1/4 மூடி,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.


 

கத்தரிக்காயை சதுர துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போடவும்.
வெங்காயம், மிளகாயை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், கடுகு, கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், மிளகாய் கறிவேப்பிலை, கத்தரிக்காய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
கத்தரிக்காய் நன்கு வதங்கிய பின், உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
கத்தரிக்காய் வெந்தவுடன், துருவிய தேங்காய் சேர்த்து, கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி மேடம் கத்தரிக்காய் பொரியல் நன்றாக இருந்தது.ஆனால் நான் ஊதா கலர் கத்தரிக்காயில் செய்தேன்.

அன்பு மோனி,
பாராட்டுக்கு நன்றி. பச்சை கலர் கத்தரிக்காய்னா பார்க்கறதுக்கு இன்னும் நல்லா அழகா இருக்கும். மற்றபடி சுவையில் எந்த
மாறுபாடுமில்லை. என்ன ஒரே நாளில் இத்தனை குறிப்புகள் செஞ்சு அசத்திட்டீங்க. சூப்பர்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம் ஒரே நாளில் செய்யலைங்க இன்னைக்கு எலுமிச்சை சாதமும், கத்தரிக்காயும் செய்தேன்.மற்ற மூன்றும் நேற்றும் வெள்ளிக்கிழமையையும் செய்தேன்.கொஞ்ச நேரத்தில் என்னை ரொம்ப நல்ல பொண்ணுனு நினைச்சிட்டீங்களே.thanks.:)

எதாவது சிம்பிளா செய்யணும்ன்னு இந்த லெமன் ரைஸ் கத்தரிக்காய் பொரியல் செய்தேன்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்பு இலா,
எனக்காக பதில் சொல்றதுக்கு ரொம்ப நன்றிப்பா. ஆமாம், இது ரொம்ப சிம்பிளா, ருசியாகவும் இருக்கும். சேம் பிஞ்ச், நேற்று இங்கேயும் இது தான்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு மோனி.
எப்ப செய்தா என்ன? இத்தனை வகை செய்திருக்கிறதே பெரிய விஷயம் தானே! இப்பவும் நல்ல பொண்னுதான்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.