கத்திரிக்காய் பாஜி

தேதி: March 13, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்திரிக்காய் - 4
தக்காளி - ஒன்று
சின்ன வெங்காயம் - 10
உருளைக்கிழங்கு - ஒன்று
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பல்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தவிர மீதமுள்ள அனைத்துப் பொருட்களையும் குக்கரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக விடவும்.
பிறகு தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலையை தாளித்து அதை வேக வைத்து எடுத்துள்ள காய்களில் கொட்டவும்.
ஒரு மத்து அல்லது பெரிய கரண்டியால் குழம்பை கடைந்து பின்னர் பரிமாறவும்.


தோசை, இட்லி போன்றவைக்கு ஏற்ற பக்க உணவு. இதனுடன் தேங்காய் சட்னியை கலந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். கண்டிப்பாக ஒரு முறையேனும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

குக்கரில் காய்களை வேகவைக்கும்போது எவ்வளவு நீர் சேர்த்து வேக வைக்கவேண்டும் என்பதையும் குறிப்பிடவும். ( நீர் ஊற்றிதானே வேக வைக்கவேண்டும்? )

உங்களது பெயரையும் தமிழில் குறிப்பிடவும்.

தளி ஓகே ஒரு பதிவு போட்டு வைத்துகறேன் அப்பதான் ஈஸியா இருக்கும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தளிகா இதே மாதிரி எங்க அம்மாவும் செய்வாங்க ஆனால் உருளைக்கிழங்கு போடமாட்டாங்க.நான் போட்டேன் டேஸ்டா கெட்டியா இருந்தது.அப்புறம் உங்க குறிப்பு எல்லாமெ தே.எண்ணெயில் இருக்கு நான் அதுக்கு பதிலா கோல்சா எண்ணெய் யூஸ் பண்ணி செய்தேன்.நல்லாயிருந்தது.

இதற்கு தே.எண் தான் அருமையாக இருக்கும்..பரவாயில்லை அதில் கூட சுவையாக செய்துவ்ட்டீர்கள் எனக்கு சந்தோஷம்.