கர்பிணிக்கான தமிழ் web site address ?

கர்பிணிக்கான தமிழ் web site address யாருக்கவது தெரிந்தாள் சொல்லவும்.
pizza, burger சாப்பிடலாமா?

டியர் ஃபாயிஜா அவர்களுக்கு,அம்மாவாக போகின்ற தங்களுக்கு முதலில் எனது அன்பான வாழ்த்துக்கள்.
தமிழில் தாங்கள் கேட்டுள்ள web site adress பற்றி தெரிந்த நேயர்கள்,கட்டாயம் தங்களுக்கு தெரிவிப்பார்கள் என்று நினைக்கின்றேன்.
இந்த தலைப்பை பொருத்தவரையில், அறுசுவையில் வரும் ஒவ்வொறு அம்மாவும் ஒவ்வொறு தமிழ் web site போன்று தான். ஆகவே இதைப் பற்றி தங்களின் சந்தேகங்களை, கேள்விகளை, தயக்கமில்லாமல் அவர்களிடமும் கேட்கலாம்(பதிவு செய்யுங்கள்)என்று கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றாக பசி எடுக்கின்றது என்று கூறியிருந்தீர்கள்.என்னுடைய அனுபவத்தில் நான், எனக்கு பிடித்த எல்லா உணவுகளையும் சாப்பிட்டேன்.நல்ல ஆரோக்கியமான குழந்தைகளைத் தான் பெற்றேன். ஆகவே என்னைப் பொருத்த வரையில் நீங்கள் எதைச் சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும் அதை செய்தோ, அல்லது வாங்கியோ பயமில்லாமல் சாப்பிடுங்கள்.முக்கியமாக பயப்படக்கூடாது.
என்னுடைய ஒரே ஒரு அட்வைஸ் என்னவென்றால், எந்த புதிய உணவையும் இந்த நேரதில் சாப்பிடவோ, அல்லது அதைப் பற்றி ஆராய்ச்சி செய்யக் கூடாது. காரணம் உடம்பிற்க்கு தேவையில்லாத stress யை கொடுக்காமல் இருப்பது நல்லது.ஆகவே பிஸ்ஸா, ஹேம்பர்கர்,போன்ற எந்த உணவும் பழக்கப்பட்டதாக இருந்தால் பயமில்லாமல் சாப்பிடலாம். நன்றி.

டியர் ஃபாயிஜா அவர்களுக்கு,அம்மாவாக போகின்ற தங்களுக்கு முதலில் எனது அன்பான வாழ்த்துக்கள்.
அல்லா உங்களுக்கு எவ்வித ஆபத்துயின்றி நல்ல குழந்தை பிறக்க துஆசெய்கின்றோம்

அம்மா ஆகப் போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
Pizza .Burger என்பவற்றில் சேர்க்கப்படும் soft cheese, cheese,mayo கர்ப்பகாலத்தில் அதுவும் ஆரம்ப கட்டத்தில் கட்டாயம் தவிர்க்கப்படவேண்டியது. பசிக்கும் போது wholemeal bread toast.boiled vegetables,fruits ,fruit yoghurts,cream cracker biscuit என்பவற்றை சாப்பிடலாம்.மிக கவனமாக உணவை ,ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ள வேண்டிய நேரமிது.

அம்மாவாக போகின்ற தங்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்கள்.

காலையில் carrot juice குடிக்கலாம்.
பழங்கள் நிறைய சாப்பிடவும். அதிலும் ஆரஞ்சு பழங்கள், நிறைய எடுத்து கொள்ளவும்.
கீரை, பச்சை காய்கறிகள் எடுத்து கொள்ளவும். broccoli, asparagus -ஐ சாப்பிடவும்.
எண்ணெய் அதிகம் உள்ள snacks-ஐ avoid பண்ணுங்கள்.
Cheese கலந்து செய்யும் உணவுகளை பார்த்து உண்ணவும். பெரும்பாலும் வெளிஉணவுகளை தவிர்ப்பது நல்லது. sugu அவர்கள் கூறியது போல soft cheese கலந்த எதையும் உண்ண கூடாது.

எதற்க்கும் பயப்பட வேண்டாம். Tension வேண்டாம். இனி ஒவ்வொரு நாளும் சந்தோசமாக ரசித்து enjoy பண்ணுங்க......

நன்றி.

நன்றி...

dear manohari madam,
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
எங்களுடைய அப்பா, அம்மாவும் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள்.
நானும் என் கணவரும் தான் இங்கு தனியாக இருக்கிறோம் அறுசுவையின் மூலம் அறிமுகமான நீங்கள் தான் எனக்கு துணையாக இருக்கிறிர்கள். நிச்சயமாக எனது சந்தேகங்களை உடன் பிறவா சகோதரியாகிய உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
இரவில் படுக்கும் போது இருமல் அதிகமாக இருக்கு என்ன செய்வது?
நன்றி

faizakader

dear hawwa mam,
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
எல்லம்வல்ல இறைவனிடம் பிறக்க போகும் குழந்தைக்கு தூவா செய்யவும்.
வஸ்ஸலாம்.

faizakader

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி
நீங்கள் கூறிய படி உணவு முறைகளை எடுத்துக்கொள்கிரேன்.
இரவில் படுக்கும் போது இருமல் அதிகமாக இருக்கு என்ன செய்வது?
நன்றி

faizakader

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி
நீங்கள் கூறிய படி உணவு முறைகளை எடுத்துக்கொள்கிரேன்.
நன்றி

faizakader

அஸ்ஸலாமு அலைக்கும்
தாயாக போகும் உங்களுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். நல்ல பசி எடுக்கிறது என்று சொல்லி இருக்கிறீர்கள் நல்லதுதான் உங்களுக்கு பிடித்ததை சாப்பிடவும்.
எனக்கு தமிழ் web site பெயர் தெரியவில்லை .baby center.com போய் பாருங்கள் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும்.எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்கவும் எனக்கும் சொந்த ஊர் காயல்பட்டிணம் தான் .

வலைக்குமுஸ்ஸலாம்
அறுசுவையின் மூலம் பல நண்பிகள் கிடைத்தது மிகவும் சந்தோஷம்.
உங்கள் சமையல் குறிப்பை பார்க்கும் போதே நினைத்தேன் நீங்கள் காயல்பட்டிணமாகதான் இருக்கும் என்று நினைத்தேன் ரொம்ப மகிழ்ச்சி.
எனக்காக தூவா செய்யவும்.

faizakader

மேலும் சில பதிவுகள்