சிக்கன் ஜிஞ்சர் சாப்ஸ்

தேதி: March 15, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழிக்கறி - 1/2 கிலோ,
இஞ்சி - 1 பெரிய துண்டு,
பெரிய வெங்காயம் - 5,
பூண்டு - 2,
காய்ந்த மிளகாய் - 10,
சோம்பு - 1 மேசைக்கரண்டி,
கசகசா - 2 மேசைக்கரண்டி,
பட்டை - 1 துண்டு,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்.


 

கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, கசகசா, சோம்பு, மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த மசாலாவை கோழித் துண்டுகளின் மீது பூசி, 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கிய பின், கோழித்துண்டுகளை போட்டு வதக்கவும்.
5 நிமிடம் வதக்கிய பின், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
சிக்கன் வெந்து மசாலா சுருண்டு வந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்