மஷ்ரூம் பார்லி சூப்

தேதி: March 16, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காளான் - கால் கிலோ
பார்லி - அரைக்கோப்பை
நறுக்கிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - நான்கு பற்கள்
உலர்ந்த காளான் - கால்கோப்பை
வெஜிடபிள் ஸ்டாக் - ஒரு லிட்டர்
ரெடிமேடாக நறுக்கிய தக்காளி - ஒரு டின் (19 அவுன்ஸ்)
உலர்ந்த தைம் இலை - ஒரு தேக்கரண்டி
நறுக்கிய பார்ஸ்லி இலை - ஒரு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டுமேசைக்கரண்டி


 

காளானை சுத்தம் செய்து மெல்லியதாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து முதலில் நறுக்கிய காளானைப் போட்டு சிவக்க வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு அதே எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
தொடர்ந்து பூண்டைச் சேர்த்து வதக்கி விட்டு வெஜிடபிள் ஸ்டாக்கை ஊற்றவும்.
பிறகு தக்காளி, பார்லி, காய்ந்த காளான் துண்டுகள், தைம் இலை, மிளகுத்தூள் ஆகியவற்றைப் போட்டு கலக்கி விட்டு கொதிக்க விடவும்.
நன்கு கொதிக்கும் பொழுது அடுப்பின் அனலைக் குறைத்து வைத்து மூடியைப் போட்டு நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு வைத்திருக்கவும்.
அல்லது பார்லி நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்திருந்து கடைசியில் வதக்கியுள்ள காளான்களைப் போட்டு உப்பைச் சேர்த்து நன்கு கலக்கி விட்டு பார்ஸ்லி இலையைத் தூவி இறக்கி விடவும்.
இந்த சூப்பை ஒரு முழு உணவாக சூடாக பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்