தேதி: March 16, 2007
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமை மாவு - 100 கிராம்,
புளித்த மோர் - 1 கப்,
காய்ந்த மிளகாய் - 6,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
நல்ல எண்ணெய் - 100 மில்லி.
கோதுமை, மோர், உப்பு சேர்த்து குழம்பு பதத்திற்கு கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மிளகாய் சேர்த்து, சிவந்ததும் கரைத்த மாவை ஊற்றி கிளறவும்.
மாவு வெந்து, அல்வா பதம் போல் வந்ததும், இறக்கி, தட்டில் கொட்டி, ஆறிய பின் துண்டுகளாக வெட்டவும்.