தஹி பாதுஷா

தேதி: March 17, 2007

பரிமாறும் அளவு: 25, 30 பாதுஷாக்கள் வரும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தயிர் - 1 லிட்டர்,
சர்க்கரை - 1/2 கிலோ,
மைதா - 150 கிராம்,
எண்ணெய் - தேவையான அளவு.


 

கெட்டியான தயிரை மெல்லிய துணியில் கட்டி தொங்க விடவும். தண்ணீர் வடிந்து, தயிர் கட்டி மட்டும் நிற்கும்.
அத்துடன் மைதாவை கலந்து, சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
பிசைந்த மாவை சிறு சிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.
சர்க்கரையை பாகு வைத்து, வெந்த வடைகளைப் போட்டு, ஊற விட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்