ஈசி பேக் சிக்கன்

தேதி: March 19, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 5 பீஸ் (லெக் பீஸ்)
இஞ்சி விழுது - 1 1/2 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
தயிர் - 1 1/2 தேக்கரண்டி
சிவப்பு கலர் - 1/4 தேக்கரண்டி
பட்டர் - 2 தேக்கரண்டி


 

அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பிசறிக் கொள்ளவும்
பின்பு மசாலா கலவையை அனைத்து இடங்களிலும் பரவும்படி பூசவும்.
இப்போது ஒரு பிளாஸ்டிக் பேப்பரினால் மசாலாத் தடவிய கோழி இறைச்சியை மூடி, ஃபிரிட்ஜில் வைத்துவிடவும். (முதல் நாள் இரவே இதனை செய்து வைத்துவிடவும்.)
அவனில் 350 டிகிரி F ஹீட்டில் செட் செய்துகொள்ளவும். கோழியை 30 நிமிடங்களுக்கு ஒருமுறை பட்டர் தடவி திருப்பி விடவேண்டும்,
45 நிமிடங்களுக்கு பின் வெந்த பின் சூடாக பரிமாறவும்


முதல் நாள் இரவே இதனை செய்து வைத்து விடவும்

மேலும் சில குறிப்புகள்