எகலப்பை என்றால் என்ன??

எகலப்பை என்றால் என்ன??

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், எகலப்பை (ekalappai) என்பது கணினியில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு உதவும் ஒரு சிறிய மென்பொருள். இந்த tool ஐ கீழ்கண்ட முகவரியில் இருந்து நீங்கள் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம்.

<a href="http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3" target="_blank"> எகலப்பை அஞ்சல் பதிப்பு </a>

அந்தப் பக்கத்தில் இரண்டாவதாக உள்ள அஞ்சல் பதிப்பினை (Anjal version) download செய்து பயன்படுத்தவும்.

இதனால் என்ன பயன்?

நீங்கள் எழுத்துதவிப் பக்கம் சென்று ஒவ்வொருமுறையும் டைப் செய்து அதை copy paste செய்யவேண்டிய தேவையில்லை. எகலப்பையை துவக்கிவிட்டு, நீங்கள் வேண்டிய இடத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிக எளிதாக டைப் செய்யலாம். உங்களுக்கு எந்த mode தேவை என்பதை எகலப்பை மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எகலப்பையில் தமிழை தேர்ந்தெடுத்துவிட்டு, நீங்கள் டைப் செய்ய ஆரம்பித்தால் அனைத்தும் தமிழில் வரும்.

இதைப்பற்றி மேலும் தகவல்களை கீழ்கண்ட விக்கிபீடியா பக்கத்தில் கிடைக்கப்பெறலாம்.

<a href="http://ta.wikipedia.org/wiki/Wikipedia:Font_help" target="_blank">http://ta.wikipedia.org/wiki/Wikipedia:Font_help</a>

மேலும் சில பதிவுகள்