ரொட்டி போண்டா

தேதி: March 22, 2007

பரிமாறும் அளவு: 7 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரொட்டி - 3
கடலை மாவு - 200 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்
சிவப்பு கலர் பவுடர் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு டீஸ்பூன்
ரீபைண்ட் ஆயில் - அரை லிட்டர்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1/2 துண்டு
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

ரொட்டியை சிறுதுண்டுடாக நறுக்கவும்
அத்துடன் மிளகாய் பொடி, உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கி வைத்துள்ள
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மோர் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்
கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் பொடி, சோடா உப்பு, கலர் பவுடர், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு வருமாறு போதிய அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும்
வாணலியில் எண்ணெயை விட்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும் போட்டு நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு சிவந்ததும் எடுத்து விடவும்.


மேலும் சில குறிப்புகள்