தும்ப பூவா

தேதி: March 22, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவல் - 1/4 லிட்டர்,
உருளக்கிழங்கு - 3,
பச்சை பட்டாணி - 1 கப்,
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
பச்சை மிளகாய் - 6,
துருவிய தேங்காய் - 1/4 மூடி,
கேரட் (துருவியது) - 1,
பூண்டு - 2 பல்,
முந்திரி - 6,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 3 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

அவலை மிக்ஸியில் ரவை போல் பொடிக்கவும்.
புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
பொடித்த அவலை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, புளித்தண்ணீரில் ஊற வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து உதிர்க்கவும்.
பட்டாணியை வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, முந்திரியை வறுக்கவும்.
சிவந்ததும் ஊற வைத்த அவல், உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
விருப்பமான வடிவ கிண்ணத்தில் தேங்காய் துருவல் சிறிது போட்டு, கேரட்டை பரவலாக தூவி, கிளறிய அவலை நன்றாக அமுக்கி விடவும்.
அதை அப்படியே ஒரு தட்டில் கவிழ்க்கவும்.


விருப்பமானால், அதன் மேல் பொடியாக்கிய கொத்தமல்லி தூவலாம்.
குழந்தைகளுக்கு விருப்பமான சிற்றுண்டியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி!...உங்களுடைய தும்ப பூவா ( உப்புமா? ) செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. செய்வதும் ஈஸியாகவும் டேஸ்டும் வித்தியசமாக இருந்தது. கேரட் கொத்துமல்லி , தேங்காய் எல்லாம் சேர்ப்பதால் பார்ப்பதற்கு கலர்ஃபுல்- ஆக இருந்தது. தும்ப பூவா என்று ஏன் பேர் வைத்தீர்கள்? ஏதாவது காரணம் இருக்கா?

அன்பு மாலதி,
நலமா? சாரி, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். எங்க அம்மா ஒரு கன்னடக்காரங்க கிட்ட இருந்து கத்துகிட்ட குறிப்பு இது. அவங்க இந்த பேரில் தான் சொல்வாங்களாம்.
நல்ல டயட், சத்தான உணவு. செய்வதும் மிக எளிது. பாராட்டிற்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.