கேரட் தக்காளி சூப்

தேதி: March 25, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

கேரட் - 1/4 கிலோ,
தக்காளி - 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 1,
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி,
வெண்ணெய் - 50 கிராம்,
சர்க்கரை - 1 தேக்கரண்டி,
மைதா - 2 தேக்கரண்டி,
தண்ணீர் - 2 கப் (400 மில்லி),
உப்பு - தேவையான அளவு.


 

தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடம் போட்டு, தோல் உரித்து, பொடியாக நறுக்கவும்.
கேரட்டை மெல்லிய வட்டமாக நறுக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் வெண்ணெய் போட்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, கேரட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
மைதா, தக்காளி, மிளகு தூள், உப்பு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
கரண்டியால் நசுக்கி விட்டு, சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டவும்.
தேவையானால் 1 ஸ்பூன் ஃப்ரஷ் க்ரீம் மேலே ஊற்றி பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஸ்னேகிதி,நேற்றிரவு இந்த சூப் செய்தேன்.கூடவே சிறிது செலரி சேர்த்தேன் .மழை நேரத்தில் சாப்பிட வெகு அருமையாக இருந்தது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அன்பு ஸ்னேகிதி,
பாராட்டுக்கு நன்றி. மழை நேரத்தில எங்களுக்கு ஞாபகப் படுத்திட்டீங்க.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி அக்கா , கேரட் தக்காளி சூப் நன்றாக வந்தது! காய்கறி என்றாலே ஓடிவிடும் பசங்களுக்கும் இது பிடித்தது, எப்படியோ கேரட் உள்ள போனா சரி! அருமையான ரெஸிபிக்கு என் நன்றி!

ஹாய் மாலி,
நலமா? பாராட்டுக்கு நன்றி. குழந்தைகளுக்கும் பிடித்தது ரொம்ப சந்தோஷம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

திருமதி. சாதிகா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த கேரட் தக்காளி சூப்பின் படம்

<img src="files/pictures/carrot_tomato_soup.jpg" alt="picture" />

ஸாதிகா,
சூப் ரொம்ப நல்லா இருக்கு (பார்க்க)
நன்றி அட்மின் & ஸாதிகா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.