ஸ்பைசி காய்கறி குருமா

தேதி: March 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காய்கறி கலவை - 2 கப் ( கேரட், பீன்ஸ், பட்டாணி, கிழங்கு)
வெங்காயம் - அரை கப்
தக்காளி - 3
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா - 4 இலைகள்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - கால் கப்
இஞ்சி - சிறியதுண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய் வற்றல் - 6
பட்டை - சிறியதுண்டு
சோம்பு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
மிளகு - சிறிதளவு
தனியா - 2 தேக்கரண்டி
கசகசா - சிறிதளவு
கிராம்பு - 3


 

முதலில் வாணலியில் மிளகாய் வற்றல், பட்டை, சோம்பு, சீரகம், மிளகு, தனியா, கசகசா, கிராம்பு எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
பின் தேங்காய், இஞ்சி, பூண்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.
பின் தயிர், அரைத்த விழுதை போட்டு வதக்கவும்
பின் நறுக்கிய காய்கறிகள், தண்ணீர், மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு போட்டு மூடிப்போட்டு வேகவிடவும். கடைசியில் கொத்தமல்லி இலை, புதினா தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

I tried this kurma & it was very tasty... Thanks a lot for the recipe...:)

மிக்க நன்றி நீங்கள் பாராட்டியதற்கு.