இரால் கொழுக்கட்டை

தேதி: March 27, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இரால் - 15
வெங்காயம் - 1(பெரியது) சின்ன வெங்காயம் என்றால் 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 4
மசலாதூள் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிது
அரிசி மாவு - 1 1/2 கப்
கீரைப்பொடி - 1 1/2 மேசைக்கரண்டி


 

முதலில் இராலை சுத்தம் செய்து மசாலா தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வெறும் சட்டியில் போட்டு தீயை மிதமானதாக வைத்து வரட்டிக்கொள்ளவும்.

பின் வெங்காயம்,பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் நறுக்கின வெங்காயம்,பச்சைமிளகாய்,உப்பு,மஞ்சள் தூள், மீதம் உள்ள மசாலாதூள் ,கருவேப்பிலை,வரட்டிய இரால் சேர்த்து தீயை குறைத்து வைத்து வதக்கவும். வெங்காயம் வெந்து நன்கு வதங்கியதும் கீரைப்பொடியை சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.

பின் அரிசிமாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வதக்கிய வெங்காய கலவையை போட்டு நன்கு பிசையவும் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும் கொழுக்கட்டை அச்சில் வைத்தோ அல்லது கையாலயோ கொழுக்கட்டை பிடித்து வைக்கவும். எல்லா மாவையும் தேவையான அளவு கொழுக்கட்டைகளாக சிறிதாகவே அல்லது பெரிதாகவே கொழுக்கட்டை பிடித்துக்கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் இட்லி தட்டு அல்லது ஸ்ட்டீமரைவைத்து அதன் மேல் செய்துவைத்த கொழுக்கட்டையை வைத்து தீயை குறைத்துவைத்து வேகவிடவும்.


தண்ணீர் கீழே உள்ள சட்டியில் வற்றிவிட்டால் திரும்பவும் ஊற்றிக்கொள்ளவும் இல்லையென்றால் சட்டி பிடித்துவிடும்.

மேலும் சில குறிப்புகள்