வெஜிடபிள் புலாவ்

தேதி: March 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாஸ்மதி அரிசி - 2 கப் (மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்து எடுத்தது)
உருளைகிழங்கு - 2
கேரட் - 1 சுமாரானது
மாங்காய் - சிறிது
பேபி கார்ன் - சிறிது
பட்டாணி - 1/2 கப்(வேகவைத்தது)
பச்சைமிளகாய் - 2
கரம்மசாலா - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
மசாலாதூள் - 1/2 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள்- 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிது


 

முதலில் உருளைகிழங்கு,கேரட்,பச்சைமிளகாய்,மாங்காயை மிகவும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.

பின் அடுப்பில் ஒரு சட்டியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம் போட்டு தாளித்து பின் நறுக்கிய உருளைகிழங்கு,கேரட்,பேபி கார்ன்,பச்சைமிளகாய்,வேகவைத்த பட்டாணி,மாங்காயை போட்டு ,எல்லாதூளையும் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.தீயை குறைத்துவைக்கவும்.காய்கறிகள் நன்கு வதங்கி வெந்ததும் வேகவைத்த சோற்றை போட்டு கிளறி சிறிது நேரம் கழித்து கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்