இந்திய முகங்களுக்கு ஏற்ற Makeup Products

இந்திய முகங்களுக்கு ஏற்ற Lakme',Revlon,L'Oreal ன் ஷேடுகளை இங்கே தருகிறேன்.

அதற்கு முன்பு,நான்கு வகையான (இந்திய)சரும நிறங்களை பார்ப்போம்.
Fair - நல்ல நிறமுடையவர்கள்
Fair to wheatish - மாநிறத்துக்கும் அதிகமான நிறமுடையவர்கள்
wheatish - மாநிறம்
dark - மாநிறத்துக்கு குறைந்த மற்றும் கருப்பான சருமம்.

Lakme'- இதுதான் முதல் சாய்ஸ்.காரணம் இந்திய நிறங்களுக்காக இந்தியாவில் தயாரிக்கப் படுவது.இந்தியாவில் இருப்பவர்களுக்கு எப்போதும் கிடைக்கும்.ஆனால் வெளி நாட்டில் உள்ளவர்கள் இந்தியா செல்லும் போது வாங்கி வந்து விடுவது தான் நல்லது.

ஷேடுகளின் பெயரையும்,எந்த வகை சருமத்திற்கு உகந்தது என்பதையும் அருகருகே எழுதுகிறேன்.அவரவருக்கு பொருத்தமான ஷேடுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

Lakme'
Liquid Foudation:
Natural Pearl- Fair
Natural Marble-Fair to wheatish
Natural shell -Wheatish
Natural Coral -Dark

Face magic daily wear Souffle:(இதுவும் ஒரு வகை பவுண்டேஷன்தான்)
Natural Pearl- Fair
Natural Marble-Fair to wheatish
Natural shell -Wheatish
Natural Coral -Dark

Compact Face Powder:
Natural Pearl- Fair
Natural Marble-Fair to wheatish
Natural shell -Wheatish
Natural Coral -Dark

Lakme' Rose powder: ( இரவு நேரங்களுக்கும் ரூஜ் போல கொஞ்சமாக உபயோகிக்க நல்லது)
Soft Pink - நல்ல சிவந்த நிறமுடையவர்களுக்கு
Warm Pink - மற்ற அனைத்து நிறங்களுக்கும்

Flawless Matte complexion Compact Powder: (வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பொருந்தாது)
Melon -Fair
Hazel -Fair to wheatish
Apricot -Wheatish
Almond - Dark

LipSticks - இந்திய நிறங்களுக்கு-நமது முகம் மற்றும் தலை முடி நிறத்துக்கு சரியானவை.

Dual definition Lip n' Liner:(Lipstick + Liner)-இது போல் 2 இன் 1 தான் பெஸ்ட்.
Expresso
Taupe
Champagne
Berry
Tofee

Lip Liner: - லிப்ஸ்டிக் நிறங்களுக்கு தகுந்த லிப் லைனரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்
Go Grape
Irish Coffee
Black Current
Walnut

Lipgloss:
25,24,53,41,52,54,63

Revlon

Colorstay Foundation: (Normal to Dry skin மற்றும் Combination/Oily skin இரண்டு வகைகளில் கிடைக்கிறது).
Buff -Fair
Nude -Fair
Natural Beige -Fair to Wheatish
Medium Beige -Wheatish
Fresh Beige -Dark

Compact Powder:
Light -Fair
Light to Medium - Fair to Wheatish
Medium Beige -Wheatish & dark

Touch and Glow Loose Powder:
Same shade as above.

Skinlights Face Illuminator:
Golden Light-All Indian Skin -For Night Makeup-முகம் இரவு வெள்ளிச்சத்தில் அழகாக தெரியும்.

Mascara:
Lash Fantasy- கண் இமை பெரிதாக தெரிய
Fabulash - தினமும் உபயோகிக்க

லிப்ஸ்டிக் லக்மே ஐ விடவும் ரெவ்லான் தான் நன்றாக இருக்கும்.

Overnight Colorstay(with Liploss Attached):
Stay Current
Always Sienna
Faithful fawn
Boundless Brandy
Bare Maximum

LipLiner:
Nudes
Plums
Siennas
Wines

L'Oreal
இந்திய முகத்திக்கு ஏற்ற பவுண்டேஷன்கள்:

True Match - Warm,Neutral இரண்டு வகையும் ஒ.க்.ஆனால் cool நன்றாக இருக்காது.
Warm:
W5 - Fair to Wheatish,Wheatish
W6 - Wheatish,Dark

Neutral:
N5 - Fair to Wheatish,Wheatish
N6 - Wheatish,Dark

Lipstick:
Kiss Proof Lip Stick:(என்னடா பெயர் ஒரு மாதிரி இருக்கிறதே என்று நினைக்காதீர்கள்.
Seductive Plum
Wine & Dine
French Toast

Colour Juice Lipstick:
Berry Spritual

Mascara:
Volume shocking Mascara-கண் இமை பெரிதாக தெரிய

அனைத்தும் மிகவும் பயனுள்ள குறிப்புகள். மிக தெளிவாக எலுதியிருக்குறிர்கள். மிகவும் நன்றி.

sajuna

வெளிநாட்டில் இருப்பதால் நானே பல முறை சரியான ஷேட் கிடைக்காமல் இந்தியாவிலிருந்து அனுப்பி வைப்பதற்காக காத்துக் கொண்டிருப்பேன்.பிறகுதான் நானே கடைக்கு சென்று தேடி வாங்க ஆரம்பித்தேன்.இதில் முக்கியமான ஒரு விஷயம் இங்கே இருக்கும் Cosmetic Advisors.அவங்களுக்கு நமது நிறத்துக்கு தகுந்த ஷேடுகளை தேர்ந்தெடுக்க தெரியாது.எப்போதும் பொருத்தமில்லாத நிறத்தைதான் பரிந்துரைப்பார்கள்.என் தோழி என்னைவிட நல்ல நிறம்.இந்தியாவில் அவள் ஒரு முறை இருப்பதிலேயே டார்க் ஷேடை வாங்கினாள்.நான் சொன்னதற்கு அப்படியா,ஷேட் வேற பாக்கணுமா என்று கேட்டாள்.
அதனால் தான் இந்த பகுதியில் வெளிநாட்டில் வாழும் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்று எழுதினேன்.

எனக்கு தெரிந்த வெளிநாட்டில் கிடைக்கும் MAYBELLINE DREAM MATTE MOUSSE FOUNDATION(060 CARAMEL)நம் இந்திய சருமத்திர்க்கு மிகவும் எற்றது.நான் முகத்திற்க்கு இது மட்டும்தான் போடுறேன்.முகம் பார்ப்பதற்க்கு பளபளன்னு பல மணி நேரம் அப்படியே இருக்கும்.AVONனில் lipstick (cherry jubilee,berry delight)இந்திய முகத்திற்க்கு சரியாக இருக்கும்.மேலும் தெரிந்துக்கொள்ள (WWW.AVON.COM),(WWW.AVONSHOP.CO.UK) தளத்திற்க்கு சென்றுப்பார்க்கவும்.விரும்பினால் அதிலியே வாங்கலாம்.விலையும் மலிவு.நன்றி

உங்களின் குறிப்புகள் மிகவும் பயனுள்ளவை.மிக அழகாக வரிசைப்படுத்தி எழுதியது; எல்லாருக்கும் புரிந்துக்கொள்ள சுலபமாக இருக்கும்.மாநிறம் என்பது என்ன கலர்?.18வயதுவரை என்னக்கு dark நிற lipstick,nail polish என்றால் நல்ல விருப்பம் ஆனால் இப்போழுது light நிறமே விருப்பமாக உள்ளது ஏன்?என்ன காரணம்?ஆர்வத்துடன் பதிலுக்கு காத்திருக்கின்ர்றேன்.நன்றி

Touch and Glow Loose Powder.இது என்ன பவ்டர் .பல கடைகளில் பார்த்து இருக்கிரேன்.்.இங்கு குப்பை போல மேக்கப் அய்ட்டங்கள் இருக்கிரது.உங்களைப்போல் விபரம் தெரிந்து வாங்கினால் பயன் அடையலாம்.மிகவும் நன்றி

sajuna

பவுண்டேசன் என்றால் என்ன?

ramba

பவுண்டேஷன் என்பது மேக்கப்பிற்கு அடிப்படையான விஷயம். பெயரிலேயே இருக்கிறது. நம் முகத்தில் இருக்கும் குறைகளை(கரும்புள்ளி, தழும்பு, பருக்கள்) முதலியவற்றை இதன் மூலம் குறைத்து காட்ட முடியும். Skin ம் Even ஆக இருக்கும்.

Jothisvarubiny sinnathurai

why do you like light colours now?

Now your mind is like light colours thatswhy you intresting.

Jothisvarubiny sinnathurai

டியர் தேவசேனா
மிகவும் அழகான முறையில் தந்து இருக்கீர்கள்.facialவீட்டிலேயே செய்யலாமா எப்படி செய்வது.ஒரு பார்டிக்கு திடிரென போகனும் என்றால் உடனே முகத்தில் புது பொலிவு கொண்டுவர முடியுமா?
வெளிநாடுகளில் பியூட்டி பார்லர்களுக்கு போனால் அவர்களுக்கு நம் சருமத்திர்க்கு தகுந்த பிளிச் ,பேசியல் செய்வார்காலா.?

முகத்திற்கு வீட்டிலேயே பேஷியல் செய்து கொள்ளலாம்.முதலில் முகத்திற்கு Scrub(Apricot Scrub or Other Scrubs)போட்டு நன்றாக மேல் நோக்கி மசாஜ் செய்யவும்.இது முகத்தில் உள்ள இறந்த செல்களை எடுத்து விடும்.பிறகு முகத்தை கழுவவும்.பிறகு எதாவது மசாஜ் க்ரீம் அல்லது முக க்ரீமைப் போட்டு(எதுவும் கிடைக்காட்டி ஆலிவ் ஆயில் போதும்)ஒவ்வொரு இடமாக மேல் நோக்கி மற்றும் வட்ட வடிவில் தேய்க்கவும்.எக்காரணம் கொண்டும் முகத்தை மேலிருந்து கீழாக மசாஜ் செய்யாதீர்கள்.கண்களை சுற்றி மெதுவாக தேய்க்கவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முகத்தை காட்டி ஆவி பிடிக்கவும் அல்லது Facial Sauna என்று கடையில் கிடைக்கும்.பார்பதற்கு மிக்ஸி போல் இருக்கும்.விலை RS300 குள்ள தான் இருக்கும்.அதில் ஆவி பிடிக்கலாம்.அதில் சிறிது தண்ணீர் ஊற்றி ஆன் பண்ணி ஆவி பிடிக்க வேண்டியதுதான்.
ஆவி பிடித்த பிறகு முகத்தை அதிகம் துடைக்காமல் ஒரு பேஸ் டிஷ்யூ வைத்து ஒற்றி எடுக்கவும்.முடிந்தால் கடையில் கிடைக்கும் பேஷியல் கிட் வாங்கி வைத்து கொள்ளுங்கள் அல்லது வீட்டில் இருக்கு ஒரு சுத்தமான கைப்பிடி முனை கூர்மையாக இல்லாத ஒரு ஸ்பூனை எடுத்து அதன் மூலம் மூக்கில் உள்ள பிளாக் ஹெட்ஸை(Black Heads) எடுக்கவும்.பிறகு முகத்திற்கு பேஸ் பாக் போடவும்(இதன் முறையை எனது வீட்டுவைத்தியம்-பயனளிக்கும் குறிப்புகளில் கொடுத்திருக்கிறேன்).

பார்ட்டி மேக்கப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று இருக்கிறேன்.அப்போது அதில் எல்லா Tactics ஐயும் எழுதுகிறேன்.ஆனால் ஒன்று எக்காரணம் கொண்டும் பார்ட்டி செல்லும் அன்று எந்த வித பேஷியல்,பிளீச்சிங் செய்யாதீர்கள்.நீங்கள் என்ன மேக்கப் போட்டாலும் கெடுத்துவிடும்.இரண்டு நாள் முன்பு அல்லது ஒரு நாள் முன்பு செய்வது நல்லது.இதை விட ஒரு வாரம் முன்பு செய்வது மிக நன்று.வெளிநாட்டில் நிச்சயம் நமக்கு தகுந்த பேஷியல்,பிளீச்சிங் செய்ய மாட்டார்கள்.ஒரே விதிவிலக்கு அந்த ப்யூட்டி பார்லர் நம்ம நாட்டை சேர்ந்தவர்கள் நடத்தினால் சாத்தியம் உண்டு.இந்திய பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும் Fem or Jolen Bleach Cream வாங்கி உபயோகப்படுத்தலாம்.

மேலும் சில பதிவுகள்