கொத்துப்பருப்பு

தேதி: March 31, 2007

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - 150 கிராம்
கத்தரிக்காய் - 1
முருங்கைக்காய் - 1
பச்சைமிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 3
வற்றல் - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
புளி - மிகச்சிறிய எலுமிச்சையளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு & உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - மூன்று கொத்து
மல்லி இலை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்


 

புளியை நானூறு மில்லி தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
வெங்காயத்தை தோலுரித்து இரண்டிரண்டாக நறுக்கி வைக்கவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்து கொள்ளவும்.
தக்காளி, கத்தரிக்காயை நான்காகவும், மற்ற காய்களை ஒரு அங்குல நீளமான துண்டுகளாகவும் நறுக்கவும்.
அனைத்தையும் ஒன்றாக போட்டு 2 விசில் போடவும்.
கரைத்து வைத்த புளியை ஊற்றி கொதிக்கவிடவும்
எண்ணெய்யை சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும் இரண்டு சின்ன வெங்காயங்களைத் தட்டி போட்டு நன்கு சிவந்து வாசனை வந்ததும் கறிவேப்பிலை, வற்றல் சேர்த்து பருப்பில் கொட்டி, மல்லி இலையும் தூவி இறுக மூடி வைத்து பத்து நிமிடம் கழித்து எடுத்துப்பயன்படுத்தவும்.


மேலும் சில குறிப்புகள்