கொன்டைகடலை புளிக் குழம்பு

தேதி: March 31, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
கத்திரிக்காய் - 2
தக்காளி - இரண்டு
கொத்தமல்லித்தழை - கொஞ்சம்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தாளிக்க
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்


 

கருப்பு கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதனை குக்கரில் வேகவிடவும்.
புளியை வெது வெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.
தேங்காயை மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கத்திரிக்காய், தக்காளியை நறுக்கவும்
எண்ணெய் சட்டியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்ததும் சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு பூண்டை வதக்கவும்.
தக்காளி, கத்திரிக்காய்களை சேர்த்து வதக்கவும். பிறகு வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலையை சேர்த்து வதக்கவும்.
காய் பாதி வெந்த நிலையில் புளியை கரைத்து அதில் உப்பு, மசாலா பொடி சேர்த்து சட்டியில் ஊற்றவும்.
குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் போது, கொத்தமல்லி தழையை போட்டு மிக்ஸியில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான கொண்டைக்கடலை புளி குழம்பு தயார்.


மேலும் சில குறிப்புகள்