தேதி: April 5, 2007
பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
நெய் - 100 மில்லி
பாதாம் - 1 கப்
ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி
சீனி - 1/2 கப்
பால் - 200 மில்லி
முந்திரிப்பருப்பு - 15
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
சீனியை பொடித்துக் கொள்ளவும். பாதாம் பருப்பை சூடான தண்ணீரில் ஊற வைத்து தோலுரித்து வைத்து அரைக்கவும்.
ஒரு அடிக்கனமான வாணலியை அடுப்பில் வைத்து பால் ஊற்றி, கொதிக்க விடவும்.
கேசரி பவுடரை கரைத்து, அதில் அரைத்த பாதாமை போட்டு 2 நிமிடங்கள் மைக்ரோவேவில் வேகவிடவும்.
வெந்ததும் பொடித்த சீனியையும் கலந்து 2 நிமிடங்கள் மைக்ரோவேவில் வேகவிடவும்
சற்று இறுகியதும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றிக் கலந்து 1 நிமிடங்கள் மைக்ரோவேவில் வேகவிடவும்.
அல்வா பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும்.
சுவையான மைக்ரோவேவ் பாதாம் அல்வா ரெடி.
Comments
microwave badamhalwa
மைக்ரோவேவ் பாதாம் அல்வாவிற்கு பால் காய்ச்சவும்
கொதிக்கவும்
என்று இருக்கு ஆனால் அதைப்பற்றி வேற எங்கும்
வரவில்லை விளக்கம் கூறவும் நன்றி
சுவையான பாதாம் அல்வா
பாதாம் அல்வா செய்வதற்க்கு எளிமையாக சுவையாக இருந்தது.மிக்க நன்றி.
ஸ்வேதா அவர்களுக்கு,
பாலில் தான் கேசரி பவுடர்,அரைத்த பாதாம் விழுது கலக்க வேண்டும்.
அன்புடன்
திவ்யா அருண்
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
thanks
thanks DivyaArun
quantity in grams
please tell me the exact quantity in grams for Badam and sugar
thanks,
sowmya
Sowmya( பாதம் - கால் கிலோ)
பாதம் - கால் கிலோ
பால் - அரை டம்ளர்
குங்மபூ - ஒன் பின்ச்
பட்டர் - இருனூறு கிராம்
சர்க்கரை - கால் கிலோ
கேசரி கலர் - ஒரு சிட்டிக்கை
Jaleela
Jaleelakamal
Thank You
Dear Madam,
Thanks for ur immediate response. Please tell me how to use Butter since u have specified ghee in the recipie and also could u give me the measures to do with 100 grams of Badam.
thanks,
sowmya