அறுசுவை இணையதளம் புதிய சர்வருக்கு மாற்றப்பட்டுள்ளது

அன்பு நேயர்களுக்கு,

பணிவான வணக்கங்கள். ஒருவழியாக Dedicated server க்கு மாறிவிட்டோம். கடந்த இரண்டு மாதங்களாக அறுசுவை இணையத்தளம் கண்டுவந்த Network errors, Max number of connections error, fatal error போன்றவை இனி <b>அதிகம் </b> இருக்காது. பிரச்சனைகளே இருக்காது என்று உறுதியாக கூற முடியாது. எல்லா சர்வர்களிலும் சிறிது நேரம் Downtime என்பது தவிர்க்க முடியாத ஒன்று. கூகிள், யாகூ போன்ற ஜாம்வான்களுக்கும் இது ஏற்படும். அறுசுவை இணையத்தளத்தை அனைவரும் பிரச்சனையின்றி பார்வையிட எங்களால் இயன்ற அனைத்தையும் செய்கின்றோம்.

புதிய சர்வருக்கு மாறிய பின்பு, இன்னும் நிறைய பகுதிகளை முழுமையாக பரிசோதிக்கவில்லை. தளத்தை பார்வையிடுவதிலோ, பெயர்ப்பதிவு செய்வதிலோ, பங்களிப்பதிலோ, உள்நுழைவதிலோ உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் உடனே எங்களுக்கு தெரியப்படுத்தவும். அடுத்த சில நாட்களுக்கு இந்த சர்வரில் சில பரிசோதனைகள் செய்யவேண்டியுள்ளது. அது போன்ற நேரங்களில் அறுசுவையை பார்வையிடுவதில் தடங்கல்கள் ஏற்படலாம். ஆனால், அவை நீண்ட நேரத்திற்கு இருக்காது. அறுசுவையை மீண்டும் ஒரு புதுப்பொலிவுடன் கொண்டுவர உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் வேண்டுகின்றோம்.

அட்மின் அவர்களுக்கு,
தாங்கள் வேண்டுகோள் விடுத்தபடி குறிப்பிட்ட நாட்களுக்குள் புதிய சர்வருக்கு மாற்றியதற்க்கு முதலில் என் வாழ்த்துக்கள்.அறுசுவை மென்மேலும் வளர வேண்டும்.வாழ்க அறுசுவை!வளர்க அதன் புகழ்!!!!!!

தாங்கள் புதிய சர்வருக்கு மாறியதில் எனக்கு தான் மட்டற்ற மகிழ்ச்சி பல நாட்க்களாக அருசுவையை நேரடியாக பார்வை இட முடியாமல் இருந்த எனக்கு,சர்வெர் மாற்றத்தால் எனக்கு தான் மோட்சம் பிறந்துள்ளது,மிக்க நன்றி!மேலும் அருசுவை மேன் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

அன்பு சகோதரருக்கு,
புதிய சர்வருக்கு மாறியதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இந்த பணியை இவ்வளவு விரைவாக செய்து முடிப்பதற்கு நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்களென்று என்னால் உணர முடிகின்றது. சிறிது நேரம் அறுசுவை தளம் கிடைக்கவில்லையென்றாலும் மிகுந்த மன வருத்தம் ஏற்படுகிறது. ஆனால் அந்த கஷ்டங்கள் இனி இருக்காது என நம்புகிறோம். எங்களுக்காக நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கும், சிரமங்களுக்கும் நன்றி.

அன்புடன்,
செல்வி.

சகோதரிகள் அனைவருக்கும் மிக்க நன்றி. மற்ற அனைவரையும்விட சகோதரி ரஸியா அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். முந்தைய சர்வர் IP address ஐ அவர்களால் access பண்ணமுடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் யார் பக்கம் பிரச்சனை என்பதே தெரியாமல் இருந்தது. இப்போது சர்வர் மாறியதும் அவரால் அறுசுவையை பார்வையிட முடிகின்றது. இதேபோல் பிரச்சனையுள்ள இன்னும் பல நேயர்களும் இந்த மாற்றத்தால் மனம் மகிழ்வார்கள் என்பது நிச்சயம்.

இந்த சர்வர் இன்னும் முழுமையாக தயார் ஆகவில்லை. தற்போதைக்கு பிரச்சனைகள் எதுவும் இன்றி செயல்படும் என்று நம்புகின்றேன்.

திரு அட்மின் அவர்களுக்கு, இந்த மகிழ்ச்சியான ஈஸ்டர் திரு நாளைப் போலவே, அறுசுவை நேயர்களுக்கு, புதிய சர்வர் என்ற அறுசுவையுடன் கூடிய விருந்தை அளித்து எங்களை மகிழ்வித்ததற்கு மிகவும் நன்றி. இதை தவிர வேறு வார்த்தைகளில்லை தங்களைப் பாராட்ட, ஆகவே நானும் மற்றும், அனைத்து அறுசுவை நேயர்களின் சார்பாகவும், உங்களுக்கும் உங்களுடன் இந்த உன்னதமான சேவையை,வெற்றிகரமாக செயலாற்றிக் கொண்டிருக்கும் அறுசுவை குழுவினருக்கும், எங்களது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம், நன்றி. நன்றி.

அன்பு சகோதரா, எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அறுசுவை தளம் மேலும் மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன். மனிதன் "போதும்... போதும்" என்று மனத்திருப்தி அடைவது உணவு விசயத்தில் மட்டுமே. அந்த உணவை விதவிதமாகவும், ருசியாகவும் சமைக்க உதவும் உங்கள் தளத்திற்க்கும், இந்த தளத்தை நிறுவி வழி நடத்தும் உங்களுக்கும், இந்த தளத்திற்கு பங்களிக்கும் அன்பு சகோதரிகளுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

சகோதரிகள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

சகோதரி ஸ்ரீதேவி அவர்களுக்கு, உங்களுடைய இரண்டு கேள்விகளுக்கு நான் இன்னும் பதில் கொடுக்கவில்லை. ஒன்று என்னைப் பற்றினது. மற்றொன்று, தமிழ் டைப்ரைட்டிங் முறையில் டைப் செய்ய என்ன செய்ய வேண்டும்?

இரண்டுக்கும் விரைவில் பதில் அளிக்கின்றேன்.

தாங்கள் புதிய சர்வருக்கு மாறியதில் எனக்கு மிகவும் சந்தோஷம். அறுசுவை நேயர்களுக்காக கடுமையாக உழைத்த உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.சில சமயம் அறுசுவைக்குள் உள் நுளைவு செய்யமுடியாவிட்டால் கஷ்டமாக இருக்கும் இனி அதுப்போல் பிரச்சனை வராது என்று நினைக்கிறேன் எப்பொழுது வேண்டுமானாலும் அறுசுவைதளத்தை பார்வையிடலாம் உங்கள் சேவை மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் எப்பொழுதும் அறுசுவைக்கு உண்டு

madam enna madam arusuvaila,. முந்தைய சர்வர் matriirunthal athanaal namaku enna laabam gmail ,yahoo mathiri chat panna mudiuma?pls sollungal

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

சகோதரி அவர்கள் நல்ல கேள்வியைக் கேட்டுள்ளார். சர்வர் மாறியதால் நேயர்களுக்கு தனிப்பட்ட முறையில் லாபம் எதுவும் இல்லை. எப்போதும் அறுசுவையால் என்ன லாபம் கிட்டியதோ அதுவேதான் தொடர்ந்து (பிரச்சனைகள் அதிகமின்றி) கிடைக்கும். ஒரு முக்கிய ஆதாயம் இதுதான்.. முன்பு அடிக்கடி உண்டான சர்வர் பிரச்சனைகள் (downtime) இப்போது அதிகம் இருக்காது. நீண்ட நேரத்திற்கு அறுசுவையை பார்வையிட முடியாமல் போகும் நிலை வராது.

அதோடு மட்டுமன்றி, ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பார்வையாளர்கள் நமது தளத்தை பார்க்க இயலும் என்ற கட்டுப்பாடு முன்பு இருந்தது. அந்த எண்ணிக்கை குறைவாக இருந்தது. இப்போதும் அந்த கட்டுப்பாடு இருக்கின்றது. இருந்தாலும், எண்ணிக்கையை முடிவு செய்வது நாம்தான். முன்பு சிலரால நமது தளத்தை பார்வையிட முடியாமல் இருந்தது. உதாரணம், சகோதரி ரஸியா அவர்கள். இனி எல்லோராலும் அறுசுவையை பார்வையிட முடியும்.
அடுத்து, இப்போது நாம் மாறியுள்ள சர்வர், கூடுதல் திறன் கொண்டது. பக்கங்கள் திறப்பதில் கொஞ்சம் வேகம் இருக்கும்.

மற்றபடி, புதிய சர்வர் மாறியதில் மேலே குறிப்பிட்டுள்ள ஆதாயங்களைத்தவிர வருகையாளர்களுக்கு வேறு எதுவும் பெரிதாக ஆதாயம் இல்லை.

எங்களைப் பொறுத்தமட்டில், ஒன்றல்ல.. நிறைய ஆதாயங்கள் இருக்கின்றன. Dedicated serverக்கு ஆகும் செலவு shared server ஐ விட பலமடங்கு. இருப்பினும் அதனால் கிடைக்கும் பலன்களும் பலமடங்கு. இந்த சர்வர் முழுக்க முழுக்க எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. பெரும்பான்மையான விசயங்களை நாங்கள்தான் தீர்மானிக்கவேண்டும். software installation, bandwidth allocation, servers restart, reboot options.. இப்படி நிறைய சொல்லலாம்.

முன்பு இருந்த சர்வரில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்கள் சரிசெய்யும் வரை காத்திருக்க வேண்டும். கடந்த இரண்டு மாதத்தில் குறைந்தது 50 முறையாவது நான் அவர்களை தொடர்பு கொண்டிருப்பேன். என்னை அவர்கள் மறக்க முடியாத அளவிற்கு அவர்களுடன் சண்டையிட்டுருக்கின்றேன். நாம் ஏதேனும் ஒன்றை செய்ய நினைக்கும் நேரம், அறுசுவை down ஆகியிருக்கும். செய்ய நினைத்ததை செய்ய இயலாமல் போய்விடும். அவர்கள் பதில் கொடுக்க தாமதமானால் அதனால் உண்டாகும் மன அழுத்தம், வேலை பாதிப்பு.. இப்படி எங்களுக்கு இருந்த நிறையப் பிரச்சனைகள் இதன் மூலம் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த பிரச்சனைகள் தீர்வதால், நாங்கள் அறுசுவைக்காக பணியாற்றும் நேரம் அதிகரிக்கும்.

சரி, இவ்வளவு பிரச்சனைகள் உள்ள சர்வரில் ஏன் இவ்வளவு நாட்கள் இருந்தீர்கள் என்று கேள்வி கேட்கின்றீர்களா? காரணங்கள் உள்ளது.

1. மூன்று வருடமாக அந்த சர்வரில் இருந்தோம். அறுசுவைக்கு வருகையாளர்கள் எண்ணிக்கை குறைந்த அளவில் இருந்தபோது நமக்கு பிரச்சனைகள் இல்லை. தற்போது வருகையாளர்கள் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்திருப்பதால், அவர்கள் நிர்ணயத்துள்ள கட்டுப்பாட்டுக்குள் நாம் இருப்பது இயலாது என்ற சூழல் உருவாகிவிட்டது. எனவே இப்போதுதான் மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. (என்ன.. ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்பே மாறியிருக்க வேண்டும்..)

2. இதுபோன்ற dedicated server களுக்கான கட்டணம் மிக அதிகம். அறுசுவையின் மூலம் பொருள் ஈட்டும் முயற்சிகளில் இதுவரை இறங்காததால், அவ்வளவு முதலீடு செய்யவேண்டுமா என்ற யோசனை இருந்தது. தற்போது இதனை நிறுவனமாக்கி, அறுசுவையை commercial food portal போல் மாற்ற இருப்பதால் கொஞ்சம் தைரியமாக முதலீடு செய்துள்ளோம். (கமர்சியல் என்றவுடன் பயந்துவிடவேண்டாம். அறுசுவையில் விளம்பரங்கள் வெளியீடு, உணவுத்துறை சம்பந்தமான பொருட்கள் விற்பனை, பொருட்கள் அறிமுகம் இப்படி சில விசயங்களை கொண்டு வரவுள்ளோம்.)

புதிய சர்வரில் கட்டுப்பாடுகள் விலகி இருப்பதால், இனி வருகையாளர்கள் பயனுறும் வண்ணம் நிறைய புதிய விசயங்களை அறுசுவையில் கொண்டு வர முடியும். அந்த வகையில் நேயர்களுக்கும் புதிய சர்வர் ஒரு ஆதாயம்தான். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் chat செய்யும் வசதியையும் விரைவில் கொண்டுவர முயற்சிக்கின்றோம்.

மேலும் சில பதிவுகள்