உளுத்தங்களி

தேதி: April 8, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

குண்டு உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ
சர்க்கரை - 150 கிராம்,
ஏலக்காய் - 5,
தேங்காய் - 1 மூடி,
நெய் - 4 ஸ்பூன்.


 

உளுத்தம்பருப்பை நன்கு சிவக்க வறுக்கவும். மெஷினில் நைசாக அரைக்கவும்.
தேங்காயை துருவி 2 டம்ளர் பால் எடுக்கவும். தேங்காய் பாலை அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்து கரைய விடவும்.
சர்க்கரை கரைந்தவுடன் உளுத்தம் மாவை கட்டியில்லாமல் தூவி கிளறவும்.
ஏலக்காயை பொடி செய்து தூவி நெய் ஊற்றி கிளறி அல்வா பதம் போல் வரும் போது இறக்கவும்.


வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 மாதம் கொடுத்து வந்தால், குழந்தைகளின் இடுப்பும், கர்ப்பப்பையும் பலப்படும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செந்தமிழ்செல்வி madam if possible tell me how to cook full uludham papruppu kali