தேதி: April 8, 2007
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமை மாவு - 1/4 கிலோ,
துவரம் பருப்பு - 1/2 கப்,
காய்ந்த மிளகாய் - 4,
சீரகம் - 1 தேக்கரண்டி,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
பருப்பை குழைய வேக வைக்கவும்.
கொத்தமல்லி, மிளகாய் நைசாக அரைக்கவும்.
பருப்பை நன்கு மசித்து அதனுடன் அரைத்த விழுது, சீரகம், உப்பு, கோதுமை மாவு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து தோசை போல ஊற்றவும்.
இதற்கு வெங்காய சட்னி, கொத்தமல்லி சட்னி பொருத்தமாக இருக்கும்.