முட்டை மஃபின் சாண்விட்ச்

தேதி: April 9, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மஃபின் - 3
அல்லது
வட்டமான பிரட் - 3
புதினா சட்னி - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி கெச்சப் - 2 டேபிள் ஸ்பூன்
முட்டை - 2
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 5 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
மசாலா தூள் - சிறிது


 

முதலில் முட்டையை நன்கு அடித்து அதில் வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, மிளகுத்தூள், மசாலா தூள் சேர்த்து நன்கு அடித்து ஒரு பானில் 1 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மூன்று முட்டைகளாக ஊற்றவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும். குறைந்த தீயில் வைத்து பொரித்து எடுக்கவும். மஃபினை டோஸ்ட் பண்ணவும்.
அதில் புதினா சட்னி, தக்காளி சட்னி தடவி முட்டையை உள்ளே வைத்து சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்