தயிர் வடை-2

தேதி: April 11, 2007

பரிமாறும் அளவு: 25 வடைகள் வரும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வடைக்கு:-
உளுத்தம் பருப்பு - 2 டம்ளர்,
பச்சரிசி - 1 தேக்கரண்டி,
ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 10,
காய்ந்த மிளகாய் - 3,
பச்சை மிளகாய் - 3,
சீரகம் - 1 தேக்கரண்டி,
பூண்டு - 3 பல்,
இஞ்சி - சிறிது,
பெருங்காயம் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.

தயிருக்கு:-
தயிர் - 1/2 லிட்டர்,
பால் - 1/4 லிட்டர்,
சர்க்கரை - 1 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவையான அளவு.


 

வடை செய்ய:-
உளுத்தம் பருப்பு, பச்சரிசி, ஜவ்வரிசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்தவற்றுடன் சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

தயிருக்கு:
தேங்காய் துருவல், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
தயிரை கட்டியின்றி கலக்கவும்.
அரைத்த விழுது, உப்பு, பால், சர்க்கரை சேர்த்து தயிருடன் கலக்கவும்.
பொரித்த வடைகளை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து தயிரில் ஊற வைக்கவும்.


கேரட் துருவல், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, காராபூந்தி, சிறிது தனியா தூள் மேலே தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்விமா, எங்கள் மகளின் பிறந்தநாள் விழாவிற்கு இந்த தயிர் வடை செய்திருந்தோம். மிகவும் நன்றாக இருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். மிகவும் நன்றி.

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

ரொம்ப நல்லாயிருந்தது செல்விமா.போட்டோ அனுப்பிருக்கேன்.

அன்பு மேனகா,
நலமா? ஷிவானி நலமா?
பாராட்டுக்கு நன்றி. போட்டோவா? வரட்டும், பார்ப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு இஷானி,
நலமா? சாரிப்பா, பதிவு கொடுத்த சமயம் வீடு கட்டும் வேலையில் பிசி. நான் இப்பத்தான் பார்க்கிறேன். மன்னிக்கவும். பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. மேனகா அவர்கள் தயாரித்த தயிர் வடையின் படம்

<img src="files/pictures/aa147.jpg" alt="picture" />