சாம்பார் வடை

தேதி: April 11, 2007

பரிமாறும் அளவு: 25 வடைகள் வரும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

வடைக்கு:-
உளுத்தம் பருப்பு - 2 டம்ளர்,
பச்சரிசி - 1 தேக்கரண்டி,
ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 10,
காய்ந்த மிளகாய் - 3,
பச்சை மிளகாய் - 3,
சீரகம் - 1 தேக்கரண்டி,
பூண்டு - 3 பல்,
இஞ்சி- சிறிது,
பெருங்காயம் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.

சாம்பாருக்கு:-
துவரம்பருப்பு - 1/4 லிட்டர் + 2 மேசைக்கரண்டி,
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
மிளகு - 1/2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ,
தக்காளி - 2,
காய்ந்த மிளகாய் - 6,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
தனியா - 3 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி,
புளி - ஒரு எழுமிச்சை பழ அளவு,
வெல்லம் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 2 ஸ்பூன்.


 

சாம்பார் செய்யும் முறை:-
1/4 லிட்டர் துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, குழைய வேக வைக்கவும்.
புளியை 1 டம்ளர் நீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, மீதி துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், மிளகு, தேங்காய் துருவல், சீரகம், தனியா, வெந்தயம் தனிதனியாக வறுக்கவும்.
பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, முழு வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
வெங்காயம், தக்காளி நன்கு வதங்கிய பின், வெந்த பருப்பை கரைத்து ஊற்றவும்.
புளித்தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
புளி வாசனை போன பிறகு, அரைத்தவற்றை கொதிக்கும் பருப்புடன் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

வடை செய்யும் முறை:-
உளுத்தம் பருப்பு, பச்சரிசி, ஜவ்வரிசி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்தவற்றுடன் சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய்சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பொரித்து எடுத்த வடைகளை கரண்டி காம்பில் குத்தி, சாம்பார் கொதித்துக் கொண்டிருக்கும் போதே போட்டு, 5 நிமிடம் கழித்து விட்டு எடுக்கவும்.


சாம்பார் சிறிது தண்ணீராகவே இருந்தால்தான், வடை போட்டதும் கெட்டியாக சரியாக இருக்கும். அவசரமாக பரிமாற வேண்டுமெனில், சுட்ட வடைகளை கொதிக்கும் நீரில் போட்டு, உடனே எடுத்து சாம்பாரில் சேர்க்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மேடம் தேவையானப் பொருட்கள் சாம்பார் பொடி இருக்கு.ஆனால் நீங்கள் அதைப் பயன் படுத்தவே இல்லையே மேடம்

மன்னிக்கவும். கவனக்குறைவாக இருந்ததால் விட்டு போயிற்று. புளித்தண்ணீர், உப்பு சேர்க்கும் போது சாம்பார் பொடியை சேர்க்கவும். தவறை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி. இனி கவனமாக இருக்க முயற்சிக்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

அருமையாக இருந்தது.அம்மாவின் கைப் பக்குவத்தை ஞாபகப்படுத்தியது.குறிப்பிற்கு மிகவும் நன்றி

மிக்க நன்றி, நானும் அம்மாவை போல் தான். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
செல்வி.

vadai ku to prepare batter shall i use mixie

டியர் பாலம்மு,(சரியா)
தாராளமாக மிக்ஸியில் அரைக்கலாம். தண்ணீர் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து அரைக்கவும். மாவை எடுப்பதற்கு முன் மிக்ஸியை இரண்டு நிமிடம் வைப்பரில் ஓடவிட்டு எடுக்கவும்.அப்படி செய்தால் வடை மிருதுவாக வரும். வாழத்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ennaku idli pullikka enna seyya ?pl soolavam i am i n australia thanks

ennaku idli pullikka enna seyya ?pl soolavam i am i n australia thanks

கிருஷ்னா அர்ப்பணம்

அரிசி உலுந்து தனித்தனியா அரைக்கவும்.
இரண்டையும் கைகளினால் கலக்கவும்.
மாவை 30 டிகிரி வெப்பத்தில் 8 மணி ணேரம் வைத்து உபயேர்கிக்கவும்.

கிருஷ்னா அர்ப்பணம்

self-confidense is the key to open the door of happiness in your life.
mone, இட்லி மாவு ஆட்டியப்பின் குறைந்தது 10 - 12 மணி நேரம் புளிக்க வேண்டும். சில சமையங்களில் முக்கியமாக
குளிர் காலங்களில் புளிப்பது கடிணம். அப்போது உபயோகப்படுத்துவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் ஈஸ்ட் சேர்த்து வைத்து பின் உபயோகப்படுத்தவும். ஈஸ்ட் இல்லையென்றால் ஒரு ப்ரெட் துண்டை மாவின் மேல் போட்டு வைக்கலாம்.
பாலா, வைப்பர் என்றால் செகண்ட்ஸ் (அ) பல்ஸ் என்று மிக்ஸியில் இருப்பதுதான்.

self-confidense is the key to open the door of happiness in your life

நன்றி daisyஅப்படி என்றால்... selvi madamகூறியுள்ள 2 mins pulse பற்றிய விளக்கம்..

அன்புள்ள டெய்ஸி,
எனக்காக பதில் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. நான் வைத்திருக்கும் ஃபுட் ப்ராசசரில் வைப்பர் என்று தானுள்ளது. (தயிரிலிருந்து வெண்ணெய் எடுக்க உபயோகிக்கும் பட்டன் தான்), வெளிநாடுகளில் என்னவென்று சொல்வார்களென்று நானறியேன். பாலம்முவுக்கு விளக்கி விடவும்.
உங்கள் கவிதைகள் சுருக்கமாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்.
நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ennaku idli pullikka enna seyya ?pl soolavam i am i n australia thanks

நன்றி ..
வைப்பர் என்றால் என்ன??