பிரட் பகோலா

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு: 10 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பிரட் - 5 ஸ்லைஸ்
துருவிய வெங்காயம் - ஒரு கப்
மசாலா பவுடர் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
இஞ்சி - ஒரு துண்டு
உருளைக்கிழங்கு - கால் கிலோ
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயப் பவுடர் - அரை தேக்கரண்டி
தயிர் - அரை கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

பிரட்டை துண்டுகளாக்கி அதில் தயிர் விட்டு நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை அரை மணி நேரம் வேக வைத்து பின் தோல் உறித்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து நன்கு காய்ந்ததும் எண்ணெய் விட்டு முதலில் கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் இவையனைத்தையும் கிளறிக் கொள்ளவும்.
இதனுடன் மசாலா தூள், கிழங்கு மசித்தது ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு கிளறிக் கொள்ளவும்.
மசாலா பதத்திற்கு வந்ததும் பிரட், தயிர் கலவையை போட்டு 5 நிமிடம் நன்றாக கிளறி உப்பு சேர்த்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்