தேதி: April 13, 2007
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பீட்ரூட் - 1/4 கிலோ,
சர்க்கரை - 200 கிராம்,
பால் - 1/4 லிட்டர்,
ஏலக்காய் - 3,
முந்திரி - 10,
பாதாம் - 5,
உப்பு - 1 சிட்டிகை,
நெய் - 1/4 கப்.
பீட்ரூட்டை துருவி பாலுடன் சேர்த்து வேக வைக்கவும்.
பீட்ரூட் வெந்ததும் உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறவும்.
நன்கு கெட்டியாக வரும் போது நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும்.
அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.
நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்து தூவி கிளறவும்.
Comments
thanks selvi medam
பீட்ரூட் ஹல்வா ரொம்ப நல்லா இருந்தது செல்வி.நான் பாலுக்கு பதில் வென்னிலா ஐஸ்க்ரீம் நிரைய இருந்ததுவீட்டில் இந்த குளிருக்கு அதை சாப்பிட முடியாது அதனால் நான் அதைத்தான் யூஸ் பன்னேன்.சர்க்கரை அளவு கொஞ்சம் குரைத்தேன்.சூப்பரா
ஹல்வா...
அன்பு மோனி,
பாராட்டுக்கு நன்றி. பாலுக்கு பதில் ஐஸ்க்ரீம்னா இன்னும் நல்லா
இருந்திருக்குமே. எப்படியோ
வீட்டிலிருந்த பொருளையும்
வீணாக்காம நல்லதொரு இனிப்பு செய்த
உங்களுக்குத் தான் பாராட்டு.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
பீட்ருட் அல்வா
ஹாய் செல்வி மேடம்,
நேற்று நான் உங்களுடைய பீட்ருட் அல்வா செய்து பார்த்தேன். சுவை மிக நன்றாக இருந்தது. இதுவரை நான் ட்ரை கூட செய்தது இல்லை. இது தான் முதல் தடவை. மிக்க நன்றி. Thank you very much for giving this receipe.
Leela.
Leela Nandakumar
லீலா,
அன்பு லீலா,
நலமா? ரொம்ப சுலபமான அல்வா, சுவையும் நல்லா இருக்கும். பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
Hi Selvi madam
ஹாய் செல்வி மேடம்,
நான் அவரைக்காய் நிலக்கடலை பொரியலும் செய்து பார்த்து நன்றி அனுப்பினேன். ஆனால் நீங்கள் எதுவும் சொல்லவில்லை. நான் நலம். நீங்கள் நலமா? உங்களை நான் எப்படி கூப்பிடுவது?
லீலா நந்தகுமார்.
Leela Nandakumar
எப்படி வேணா...
அன்பு லீலா,
சாரிம்மா, இப்ப பதில் கொடுத்துட்டேன், சந்தோஷமா சிரி. பார்க்கலாம்.
மேடம் தவிர எப்படி வேணா கூப்பிடலாம், உனது பிரியம் போல்:-))
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.