பிடி கொழுக்கட்டை

தேதி: April 14, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 2 ஆழாக்கு
தேங்காய் துருவல் - ஒரு கப்
கடுகு - தாளிக்க
பெருங்காயம் - சிறிது
துவரம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் மற்றும் நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

அரிசியை ரவை போல அரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயை காய வைத்து, கடுகு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகாய் தாளித்து 3 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
அதனுடன் உப்பும், தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.
தண்ணீர் கொதித்த பின், உடைத்து வைத்துள்ள அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளறவும்.
இந்த கலவை கெட்டி ஆன பின், அடுப்பை அணைத்து, சூடு ஆறியதும் கொழுக்கட்டை போல பிடித்து, இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம்(steam) வேக விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சந்தியா உங்கள் பிடி கொழுக்கட்டை மிகவும் அருமை நன்றி

எளிமையான, சுவையான, ஆரோக்கியமான குறிப்புக்கு நன்றி...தேங்காய் சட்னியுடன் அருமையாக இருந்தது..

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.