தேதி: April 14, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சரிசி- 2 கப்
தேங்காய்த்துருவல்- 1 கப்
முட்டை-2
சீனி- அரை கப்
உப்பு- 1 சிட்டிகை
பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்
பச்சரிசியை நீரில் அரிசி மூழ்குமளவிற்கு ஊறவைத்து 2 மணி நேரம் கழித்து நீரை வடிக்கவும்.
பிறகு அரிசியை நிழலில் அரை மணி நேரம் உலர வைக்கவும்.
உலர்ந்த அரிசியை இடித்து இரண்டு முறை சலிக்கவும்.
தேங்காயில் இளஞ்சூடான நீர் ஊற்றி கெட்டியான தேங்காய் பால் எடுக்கவும். அதன் சக்கையில் இரண்டாம் பாலும் எடுக்கவும்.
முட்டைகளை நன்கு அடிக்கவும்.
சீனியைப் பொடி செய்து முட்டையில் உப்புடன் சேர்த்து மறுபடியும் சில வினாடிகள் அடிக்கவும்.
இதை கெட்டித்தேங்காய்ப்பாலுடன் கலந்து கொண்டு, சிறிது சிறிதாக மாவில் கலக்கவும்.
தேங்காய்ப்பால் பற்றாவிடில் இரண்டாம் பாலை சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
மாவு தோசை மாவுப் பதம் இருக்க வேண்டும்.
அடுப்பில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
முறுக்கு அச்சையும் அதில் மூழ்குமாறு வைத்து சூடாக்கவும்.
சூடான அச்சை மாவில் முக்கால்வாசி பாகம் மூழ்கும்படியாக அமிழ்த்தி உடனே எடுத்து எண்னெயில் வைத்து அச்சை குலுக்கிக் கொண்டே இருந்தால் முறுக்கு அச்சிலிருந்து பிரிந்து எண்ணெயின் நடுப்பகுதிக்குச் சென்று பொரிய ஆரம்பிக்கும்.
முறுக்கு பொன்னிறமாகச் சிவந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.
இதேபோல எல்லா முறுக்குகளையும் பொரித்தெடுக்கவும்
மாவில் முறுக்கு அச்சை அமிழ்த்துமுன் எப்போதும் அச்சு சூடாக இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Comments
அக்கா
எங்கம்மா இதில் கறுப்பு எள்ளையும் சேப்பாங்க...சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு...அச்சு எங்க இங்க கிடைக்கும்னு சொல்ரீங்களா?செஞ்சு சாப்பிட ஆசை.(நீங்களே செஞ்சு தந்தாலும் பரவால;-))
விருந்தே தருகிறேன்,தளிகா!
அன்புள்ள தளிகா!
இதற்கான அச்சு அல் ஃபலா ப்ளாசா, சில இரானிய கடைகள், அல் மனாமா சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். இப்போது என் சொந்த ஊரில் இருக்கிறேன். துபாய் வந்ததும் தெரிவிக்கிறேன். எப்போது வருகிறீர்கள் என்று சொல்லுங்கள், ஒரு பெரிய விருந்தே செய்து போடுகிறேன்.
விருந்துக்கே
நீங்க விருந்துக்கே அழைத்ததில் வந்து சாப்பிட்ட மகிழ்ச்சி...தயங்காமல் கூப்பிடதுக்கு ரொம்ம்ப சந்தோஷம்..இனி அச்சை கன்டுபிடிச்சு முறுக்கு செஞ்சுட்டு உங்களை விருந்துக்கு கூப்பிடரேன்:-)..அதிரசம் தான் முதலில் செய்யனும்.
நன்றாக இருந்தது
மனோ மேடம் நான் நேற்று கொலுசா முறுக்கு செய்தேன் நன்றாக இருந்தது அதில் நான் கருப்பு எள் சேர்த்து செய்த்தேன் நன்றி
அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!
அன்புள்ள ஜுலேஹா!
அன்புள்ள ஜுலேஹா!
கொலுசா முறுக்கு செய்து பார்த்து அது சுவையாக வந்ததென அன்பான பின்னூட்டமளித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி!!