எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

தேதி: April 15, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (9 votes)

 

பிஞ்சு கத்தரிக்காய் - 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
தேங்காய் துருவல் - 1/2 மூடி,
கசகசா - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 8,
பூண்டு - 4 பல்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
புளி - ஒரு பெரிய எழுமிச்சம் பழ அளவு,
கறிவேப்பிலை - சிறிது,
வெல்லம் - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 4 ஸ்பூன்.


 

கத்தரிக்காயை பாதி காம்பை மட்டும் வெட்டி விட்டு, நான்காக பிளந்து தண்ணீரில் போட்டு வைக்கவும்.
புளியை 1 டம்ளரில் ஊற வைத்து, கரைத்து வடி கட்டவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய், சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
ஆறிய பின், தேங்காய், கசகசா, தனியா தூள், உப்பு சேர்த்து, நைசாக அரைக்கவும்.
கத்தரிக்காயை மெதுவாக பிளந்து அரைத்த விழுதை உள்ளே திணிக்கவும்.
மீதியுள்ள விழுதை புளிக்கரைசலில் கரைத்து வைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, பூண்டு, கறிவேப்பிலை தாளித்து, கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.
எண்ணெயிலேயே கத்தரிக்காய் பாதி வேக வேண்டும்.
புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், வெல்லம் போட்டு கொதிக்க விடவும்.
கத்தரிக்காய் வெந்து குழம்பு கெட்டியானதும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

here u have given half coconut.i couldnot understand.is it half in entire full coconut or how it goes.please respond

எப்படியிருக்கீங்க? நலமா? நீங்க கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. தேங்காயை இரண்டாக உடைத்தால் கிடைக்கும் 2 மூடிகளில், ஒன்றை மட்டும் துருவிக் கொண்டு, அதில் பாதியை எடுத்துக் கொண்டால் போதுமானது. விளங்க சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விமா,

இன்னைக்கு இந்த டிஷ் பண்ணேன்:-) ரொம்ப சூப்பரா வந்தது:-)இன்னும் நாக்குலேயே டேஸ்ட் இருக்கு. ஹஸ் வீட்டுக்கு வரற்த்துக்குள்ளவே கத்திரிக்காய் எல்லாம் காலி ஆகிடும் போல இருக்கு:-). கசகசா, வெல்லம் வீட்ல இப்ப இல்லை. அதை தவிற அனைத்தையும் போட்டு பண்ணேன். ஆஹா! அருமை அருமை:-).

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அன்பு செல்வி முதன் முதலில் உங்கள் குறிப்பை செய்யும் சந்தர்ப்பம் இன்று தான் கிடைத்தது.குழம்பு மிகவும் சுவையாக இருக்கின்றது. எண்ணெய் தான் எனக்கு நான்கு மேசைக்கரண்டி தேவைப்பட்டது. நான் குறிப்பை தேர்வுச் செய்யும் பொழுது சுலபமான ஒரு குழம்பு வகையைக் கொடுக்கலாம் என்று குழம்பு பகுதிக்குச் சென்று தேர்வு செய்த பின்பு தான் உங்கள் பெயரைப் பார்த்தேன். உடனே அதற்கு தேவையான பொருட்களைக் கூட ஆராயவில்லை நிச்சயம் சுலபமாகத் தான் இருக்கும் என்று உடனே தீர்மானித்து விட்டேன். அதைப் போல் தான் இருந்தது. நம்மூர் கத்திரிக்காய் இங்கு தேவைப்படும் பொழுது கிடைக்காது ஆகவே மற்றொரு ரகத்தில் நேரிடையாக மசாலாவை ஊற்றி செய்துவிட்டேன். தங்களின் குறிப்புக்கும், தாங்கள் கொடுத்த ஆலோசனைக்கும் நன்றி.வர்ட்டா...

அன்பு சகோதரி மனோகரிக்கு,
நலமா? முதலில் எனது குறிப்பை தேர்ந்தெடுத்தமைக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கண்டிப்பாக சின்ன கத்தரிக்காய் கிடைக்கும் போது ஒருமுறை செய்து பாருங்கள். முழு கத்தரிக்காயின் ருசியே தனிதான். என் சின்ன பெண்ணிற்கு இந்த குழம்பு பிடிக்கும் என்பதால், அவள் இல்லாமல் இந்த குழம்பே செய்யாமல் இருந்த என்னையும் இந்தக் குழம்பு வைக்க வைத்து விட்டீர்கள் அறுசுவை சமையல் மூலம். தங்களின் பாராட்டுக்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. மீண்டும் நன்றிகள் பல.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி இன்று செய்த இந்த குழம்பு என் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. நன்றி.நான் அருசுவையை பல நாட்களாக பார்வையிட்டபோதும் பதிவு செய்தது சமீபத்தில்தான். உங்கள் போட்டோ பார்க்க ஆவலாக உள்ளேன்.

டியர் கோதை,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
எப்படியிருக்கீங்க? உங்களோட பாராட்டுக்கு மிக்க நன்றி.
மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள செந்தமிழ்செல்வி

இன்று எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்தேன், மிகவும் நன்றாக இருந்தது. சின்ன வெங்காயம் இல்லாததால் பெரிய வெங்காயம் வைத்து செய்தேன், இருந்தும் நன்றாகவே இருந்தது.உங்கள் குறிப்புகள் சுலபமாகவும் நன்றாகவும் இருக்கின்றன

ஹாய் ஹர்ஷ்,
பாராட்டுக்கு நன்றி. கசகசா இல்லாவிட்டால் சுவையில் பெரிய மாற்றம் தெரியாது. குழம்பு கொஞ்சம் திக்காக இருக்கும், புளியின் சூட்டைக் குறைக்கும். வெல்லத்துக்கு பதிலாக சர்க்கரை கூட சேர்க்கலாம், அது புளியின் வெடிப்பைக் குறைக்கத்தான்.நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள ரீட்டா,
நல்மா? உங்கள் பாராட்டுக்கு நன்றி. சின்ன வெங்காயத்தில் செய்தால் இன்னும் கொஞ்சம் சுவை கூடும். அடுத்த முறை செய்து பாருங்கள். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

எனக்கு கத்தரிக்காய் என்றால் உயிர். அதுவும் எண்ணெய் கத்தரிக்காய் ரொம்ப பிடிக்கும்.அம்மா நன்றாக செய்வார்.உங்கள் குறிப்பை பார்த்தவுடன் அம்மா நியாபகம் வந்துவிட்டது :-(...............

செல்விம்மா,
எண்ணெய் கத்தரிக்காய் நேற்று செய்தேன்.சூப்பரா இருந்தது. இரவு டிபன்னுக்கும் அதே சாப்டோம். ரொம்ப நல்லா இருந்தது.அம்மா சமைப்பது போலவே இருந்தது.அறுசுவை புண்ணியத்துல நல்லா சமைக்கிறேன்னு பேர் கிடைக்குது.
அன்புடன்
திவ்யா

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

இந்த குழம்பு மிக நன்றாக இருந்தது. இதே மாதிரி கத்தரிக்காயை பொரித்து தேங்காய்ப்பால் விட்டு இலங்கையில் குழம்பு செய்வோம். இதுவும் அதே சுவையில் இருந்தது:) வாழ்த்துக்களும் நன்றியும்.
-நர்மதா:)

டியர் நர்மதா,
எப்படியிருக்கீங்க? உங்களோட பாராட்டுக்கு மிக்க நன்றி.
கிராஸ் ஸ்டிச்சில் என்ன மாதிரியான வேலைப்பாடுகள் செய்வீர்கள்? எனக்கும் கொஞ்சம் ஆர்வமுண்டு. முடிந்தால் சொல்லவும். நன்றி. மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள திவ்யா,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
எப்படியிருக்கீங்க? உங்களோட பாராட்டுக்கு மிக்க நன்றி.
இதுவும் எங்க அம்மாவோட சமையல் தான்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

-

இன்று எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு,வெந்தயக்கீரை கூட்டும் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது.
வெந்தயக்கீரை கூட்டில் அரிசி பச்ச அரிசியா இல்லை புலுங்கல் அரிசியா என்று தெறியவில்லை அதனால் பச்ச அரிசி உபயோகித்தேன்.
உங்கள் குறிப்புகள் சுலபமாகவும் நன்றாகவும் இருக்கின்றன.நான் எப்பொலுதும் வெந்தயக்கீரை சாம்பார் வைப்பேன் இன்று கூட்டு வைத்தேன்.நன்றாகா இருந்தது அருசுவை புண்ணியத்தில் வீட்டில் ஒரே பாராட்டு மழை தான் நன்றி அருசுவை

டியர் கவி,
நலமா? இரண்டும் நல்ல காம்பினேஷன். கூட்டுக்கு எந்த அரிசி வேண்டுமானாலும் போடலாம். வீட்டில் அதிகம் செய்து வரும் குறிப்பிகளைத்தான் நான் கொடுப்பதால் சுலபமாக இருக்கும். உங்கள் பாராட்டுக்கு நன்றி. அறுசுவைக்கு நாம எல்லோருமே நன்றி சொல்ல வேண்டும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள கோமதி,
எப்படியிருக்கீங்க? உங்களோட பாராட்டுக்கு மிக்க நன்றி.
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
என் தங்கையின் பெயரும் கோமதி தான், எனக்கு அவள் ஞாபகம் (மட்டும்) வந்து விட்டுது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நான் உங்களுடைய இந்த குறிப்பை செய்து பார்தேன்.என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது.அதனால் தான் அம்மா என்று குறிப்பிட்டேன்.தவறாக நினைத்துவிடாதீர்கள்.

அன்புடன்
அனு

ஹாய் அனு,
உனக்கு மட்டுமல்ல, எனக்குமே இந்த குழம்ப செய்தா எங்க அம்மா ஞாபகம் தான் வரும். நீயும் என்ன அம்மான்னே கூப்பிடலாம், தப்பா எல்லாம் நினைக்க மாட்டேன். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விமா,
என்னால் அறுசுவையின் மன்றத்து பகுதிகளில் சில பதிவுகளில் நுழைய இயலாததால் இங்கே எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய 4 வது சதத்திற்கு என்னுடய மனமார்ந்த வாழ்த்துக்கள்

அன்பு அனு,
நுழைய முடியாம கஷ்டப்பட்டு, எங்காவது வாழ்த்திட வேண்டும்கிற உனது அன்புக்கு தலை வணங்குகிறேன். வாழ்த்துக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நலமா? இந்த முறைப்படி கத்தரிக்காய் செய்தேன்.மிகவும் அருமை.என்னவருக்கும் பிடித்திருந்தது. மிகவும் நன்றி.மேலும் மீன் விந்தாலு மற்றும் காலிப்ளவர் பிரியாணி வித்தியாசமான சுவையுடன் அருமையாக இருந்தது.அதற்கும் மனமார்ந்த நன்றிகள்.மகள் உறங்கும் நேரத்தில் தான் பதிவுகள் போட முடிவதால் அந்தந்த குறிப்புகளுக்கு கீழ் பதிவு போட முடிவதில்லை.அதற்காக மன்னிக்கவும்.

அன்பு சுகு,
நலமா? மகள் நலமா? பாராட்டுக்கு மிக்க நன்றி. பரவாயில்லை. தனித்தனியா சொல்லணும்னு இல்லை. எங்க பாராட்டினாலும் பாராட்டுதானே! உனக்கு மட்டுமன்றி உன் கணவருக்கும் பிடித்திருந்தது மிக்க சந்தோஷம்.நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

சகோதரி செல்வி அவர்களுக்கு,

உங்களுடைய ஹெல்ப்பினால் எண்ணைய் கத்திரிக்காய் குழம்பு செய்துட்டோம்.ரொம்ப டேஸ்ட்டாக இருந்தது.இங்கே ஒரு சகோதரி கூறியிருப்பது சர்வ நிஜம்,நாக்குல டேஸ்ட் அப்படியே இருக்கு .என் பிரெண்ட்ஸ்ம் உங்களிடம் தேங்க்ஸ் தெரிவிக்க கூறினார்கள்.
சந்தேகத்தை ரெஸிபியில் எந்த கோணத்தில் கேட்டாலும் பதிலளித்து சமையலில் அனுபவம் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கிறீர்கள்.மிக்க நன்றி.
சனிக்கிழமை மதியமே செய்தாகிவிட்டது.உடனே பின்னூட்டம் அனுப்பாததற்கு மிகவும் சாரி.என்னிடம் பி.சி.இல்லை.அலுவலக நேரத்தில் அலுவலகத்திலும்,மற்ற நேரத்தில் பிரெண்ட் வீட்டிலும் தான் நெட் பார்க்க முடியும்.பிரெண்ட் ஊரில் இல்லாததால்(இந்த தம்பதியர் மூலமாக தான் இந்த பயனுள்ள அறுசுவை இணையதளம் பற்றி எனக்கு தெரிந்தது.)உடனே என்னால் பின்னூட்டம் அனுப்ப இயலவில்லை.மன்னிக்கவும்.
அப்படியே,வடகறியில் நேரம் கிடைக்கும் போது பதில் தருவீர்களா.நன்றி.

ஜோயல்

தங்கள் குறிப்பு மிகவும் அருமை.

தங்கள் குறிப்பு மிகவும் அருமை.

தங்கள் குறிப்பு மிகவும் அருமை.

அன்பு அலமேலு,
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரர் ஜோயலுக்கு,
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் நண்பர்களுக்கும் எனது நன்றி.
30 வருடங்களுக்கு பக்கமாக சமைத்து இது கூட தெரியவில்லை என்றால், சமைத்து என்ன பயன்?
மன்னிப்பெல்லாம் எதற்கு? சமைத்து பார்த்து பின்னூட்டம் கொடுப்பதே பெரிய விஷயம். உங்களின் பிழையில்லாத தமிழ் சந்தோசமளிக்கிறது. எந்த நாட்டில் இருக்கிறீர்கள்? தமிழ்நாட்டில் சொந்த ஊர் எது? விருப்பமிருந்தால் சொல்லவும். மீண்டும் நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள செல்வி அக்கா
எப்படி இருக்கீங்க. நேற்று உங்களுடைய எண்ணெய் கத்தரிக்காய் செய்தேன். இது எனக்கு ரெம்பவும் பிடித்த டிஷ் ஆனால் செய்தது கிடையாது. என் ப்ரெண்ட் வீட்டில் 5 வருஷம் முன்னாடி சாப்பிட்டது.இப்ப உங்கள் ரெசிபியை வைத்து செய்து பார்த்தேன் அதே சுவை கிடைத்தது. என் கணவர் 2 நாள் முன்னாடியே சின்ன கத்தரிக்காய் வாங்கி வந்து எண்ணெய் கத்தரிக்காய் செய்து தா என்றார்கள் அப்புறம் அவங்க டோக்கியோ போய்ட்டாங்க நேற்றுதான் செய்து கொடுக்க முடிந்தது. நன்றாக உள்ளது என்று சாப்பிட்டார்கள். எப்பொழுதும் ஒரே சமையலை செய்வதை விட டிப்ரெண்ட்டாக செய்து பார்த்து சமைப்பது எனக்கு ரெம்பவும் பிடிக்கும். அது என் கணவருக்கு பிடித்துவிட்டால் என் சந்தோஷம் கேட்கவே வேண்டாம். சூப்பரான குறிப்பு தந்ததுக்கு மிக்க நன்றி.

அன்புடன் கதீஜா.

ஹாய் கதீஜு,
நலமா? பாராட்டுக்கு மிக்க நன்றி. கணவருக்கும் பிடித்தது சந்தோஷமா இருக்கு. பையன் எப்படி இருக்கான். இந்தியா உன்னை விடமாட்டேங்குது போல.
உனக்கு என் போன் நம்பர் தெரியுமே, போன் செய்யலாமில்ல? உன் கூட பேச மாட்டேன், போ
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் ஆண்டி இந்த குழம்பு செய்தேன் ரெம்ப நல்லா வந்தது நன்றி

ஹாய் ஸ்வேதா...
பாராட்டுக்கு நன்றி. நல்லா வந்ததுன்னா, நீ சரியான பக்குவத்தில் செய்திருக்கிறாய் என்று அர்த்தம். அதனால், உனக்கும் பாராட்டுக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹலோ செல்விமா,
மீன் குழம்பு போல் "எண்ணெய் கத்தரிக்காய்" குழம்பும் சூப்பர். சின்ன கத்தரிக்காய்,வெங்காயம் கிடைக்கவில்லை,வீட்டில் இருந்ததை கொண்டு செய்தேன், நன்றாகவே இருந்தது.

அன்பு விஜி,
அடுத்தமுறை சின்ன கத்தரிக்காயும், சின்ன வெங்காயமும் கிடைக்கும் போது செய்து பாருங்கள். சுவை அள்ளும். மறக்காம அதிகமாக செய்யுங்கள். அப்பத்தான் உங்களுக்கு கிடைக்கும். பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

குழம்பு சூப்ப்ரோ சூப்பர். சொல்வதை விட செய்து சாப்பிட்டால் தான் தெரியும், அதனால் சொல்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றாக வந்தது. நான் வேற மாதிரி செய்வேன்.அதாவது இதில் பூண்டு, வெங்காயம் சேர்க்க மாட்டோம். இந்த முறை இந்த மாதிரி செய்யலாம் என்று செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. என் ஹஸ்பெண்ட் திரும்பவும் ஒரு நாள் இதே மாதிரி செய் என்று சொல்லியிருக்கிறார். நன்றி உங்களுக்கு . ஒரு பூச்செண்ட்.

ஹாய் விஜி,
பூச்செண்ட் ரொம்ப அழகா இருக்கு. பத்திரமா வெச்சுக்குவேன். இது எங்கம்மாவோட பாரம்பரிய குறிப்பு. கொஞ்சமா செய்தால் எங்க வீட்டில பத்தவே பத்தாது. வீட்டுக்காரருக்கு பிடித்ததும் மகிழ்ச்சி. பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.