காரட் பாதுஷா

தேதி: April 15, 2007

பரிமாறும் அளவு: 20 பாதுஷாக்கள் வரும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காரட் - 1/4 கிலோ,
மைதா - 150 கிராம்,
சர்க்கரை - 150 கிராம்,
டால்டா - 2 ஸ்பூன்,
ஏலக்காய் - 5,
உப்பு - 1 சிட்டிகை,
எண்ணெய் - தேவையான அளவு.


 

காரட்டை ஆவியில் வேக வைத்து மசிக்கவும்.
அதில் மைதா, ஏலக்காய் தூள், டால்டா விட்டு, தண்ணீர் விடாமல் மெதுவாக பிசைந்து கொள்ளவும்.
மாவை பாதுஷா போல் செய்து கொள்ளவும்.
சர்க்கரையை கம்பி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
எண்ணெயை சூடாக்கி பாதுஷாக்களை சிவக்காமல் பொரித்து எடுத்து, பாகில் போடவும்.
5 நிமிடம் ஊறிய பின் எடுத்து, பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்விக்கா, இந்த காரட் பாதுஷாவை செய்தேன். நன்றாக வந்தது. கலரைப்பாத்து என் பெண்ணிற்கு மிகவும் பிடித்து போனது. சத்தான, இயற்கையான கலரை சேர்த்த திருப்தி எனக்கு. இதில் காரட் சேர்ப்பதால், எத்தனை நாட்கள் வரை வெளியில் வைத்து இருக்கலாம். நன்றி.

ஹாய் வானதி,
எப்படியிருக்கே? இந்த குறிப்பை செய்து பார்த்ததற்கு நன்றி. கண்டிப்பாக கலர் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். செய்வதும் சுலபம். வெளியில் வைத்தால் 2 நாட்களுக்கு தாங்கும். பிரிஜ்ஜில் வைத்தால் 4,5 நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாம். அனார்கலி செய்முறை நீ கேட்டது போல் போட்டொ எடுத்து வைக்கிறேன். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா இது பாக்க மட்டும் இல்ல டேஸ்டும் சூப்பர்தான். நீங்க அனார்கலியின் ரெஸிப்பிய குடுக்கப்போக உங்களுக்கு நான் பனிஷ்மன்ட் குடுத்துட்டேன்(ஃபோட்டொ எடுக்கச்சொல்லி) உங்கள் சிரமம் பாராமல் எங்களுக்காக நீங்க ஃபோட்டொ எடுப்பதற்கு நன்றி அக்கா.

ஹாய் வானதி,
போட்டோ எடுக்கும் பனிஷ்மென்ட் எனக்கில்லை. என் கணவருக்குத்தான்.
உங்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள்
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா, அப்ப உங்க கணவருக்கு எங்க நன்றியைத் தெரிவித்துவிடுங்கள். உங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.