தக்காளி தோசை

தேதி: April 16, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

இட்லி அரிசி - 2 கப்
தக்காளி - 8
பூண்டு - 2 பல்
காய்ந்த மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு


 

மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் தோசைக்கு அரைப்பது போல் அரைத்து வைக்கவும்.
மாவு தோசை பதத்தை விட சிறிது நீர்க்க கலந்து கொள்ளவும்.
இது புளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ரவா தோசை போல் ஊற்றி எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நான் ஜலீலாவின் தக்காளி தோசைக்கு அடிமை. உங்கள் முறையில் செய்து பார்த்தேன். சற்றே வித்தியாசமான சுவையில் நன்றாக இருந்தது.

நன்றி
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இப்பதான் உங்க தக்காளி தோசை குறிப்பினை பார்த்து மாவு பண்ணி ஒரு தோசை மட்டும் சாப்பிட்டு பார்த்தேன். ரொம்ப நல்லா இருக்கு.
கூட ரவா மிக்ஸ் பண்ணியும் பார்த்தேன். அது இன்னும் சூப்பரா இருக்கு.! பொதுவா எனக்கு தக்காளியில் செய்த எந்த உணவும் பிடிக்கும். குறிப்பிற்கு ரொமப நன்றிப்பா!