காலிஃப்ளவர் சாப்ஸ்

தேதி: April 16, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காலிஃப்ளவர் - 1,
முட்டை - 1,
காய்ந்த மிளகாய் - 3,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
சோம்பு - 1 தேக்கரண்டி,
கடலை மாவு - 100 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


 

மிளகாய், சோம்பு, சீரகம் சேர்த்து நைசாக அரைக்கவும்.
காலிஃப்ளவரை வெந்நீரில் போட்டு எடுத்து, பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரைத்த விழுது, காலிஃப்ளவர், சிறிது உப்பு சேர்த்து 3/4 பதம் வெந்ததும் இறக்கவும்.
கடலை மாவு, மிளகாய் தூள், உப்புடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும் (பஜ்ஜி மாவு பதத்திற்கு).
வேக வைத்த காலிஃப்ளவரை இந்த கரைசலில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்