தேதி: April 16, 2007
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சரிசி - 200 கிராம்,
உளுத்தம் பருப்பு - 200 கிராம்,
சர்க்கரை - 150 கிராம்,
தேங்காய் - 1,
ஏலக்காய் - 4,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - சுடுவதற்கு.
தேங்காயை துருவி கெட்டியாக பால் எடுத்து வைக்கவும்.
ஏலக்காயை பொடி செய்யவும்.
சர்க்கரை, தேங்காய் பால், ஏலக்காய் சேர்த்து கலக்கி வைக்கவும்.
அரிசியும் உளுத்தம் பருப்பையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்த மாவை சிறு நெல்லிக்காய் அளவு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பொரித்த பணியாரங்களை தேங்காய் பாலில் 1/2 மணி நேரம் ஊற வைத்து பரிமாறவும்.
சிவக்க பொரிக்காமல் இளம்பதமாக பொரிக்க வேண்டும். செட்டிநாட்டு பக்கம் சிரட்டையில் ஓட்டை செய்து, மாவை கொட்டாங்குச்சியில் ஊற்றி, எண்ணெயில் ஒவ்வொரு உருண்டைகளாக விழும் படி விடுவர். (பழக்கம் இருந்தால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.)
Comments
செல்வி மேம்
நேத்து பால் பணியாரம் செஞ்சேன்...
பச்சரிசியும் , உளுந்தும் தண்ணி விடாமதான் அரைச்சேன்..ஆனாலும் மாவு கெட்டியா இல்ல... மாவு பதம் எப்படி இருக்கணும் ?
கொஞ்சம் சொதப்பிட்டேன்னு நினைக்கிறேன்....மாவு கெட்டியா இருக்க பச்சரிசி மாவு கொஞ்சம் கலந்துகிட்டேன்.. அதுவுமில்லாம தேங்காய்ப்பால் கொஞ்சம்மா ஆயிட்டு.. அதுனால அதோட ரியல் டேஸ்ட் தெரியல... இதுவரைக்கும் நான் பால் பணியாரமே சாப்பிட்டதில்ல... ஆனா நான் செஞ்சது சாப்பிட நல்லா இருந்தது :-)
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
பால் பணியாரம் ...
அன்பு சங்கீதா,
பால் கொழுக்கட்டைக்கு அரைக்கிற மாதிரி கெட்டியாக வராது. கையிலே தண்ணீர தொட்டுட்டு சின்ன சின்னதாக கிள்ளி போடற மாதிரி போடணும், கெட்டியாக இருந்தா மெத்துன்னு வராது.
தேங்காய் பால் நிறைய இருக்கணும். பாதி தேங்காய் பால், பாதி பால்னு கூட வைத்துக்கொள்ளலாம்.
எப்படியோ நல்லா வந்தா சரி.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
செல்விமா
ஓஹோ.. நாந்தான் மாவு தண்ணியாயிடுச்சோன்னு பயந்துட்டேன்... அப்ப நான் சரியாதான் செய்துருக்கேன்... இன்னொரு தரம் தேங்காய்ப்பால் நிறைய சேர்த்து செய்யறேன்..
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.