பீட்ரூட் பொரியல்

தேதி: April 19, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

பீட்ரூட்- 3
சிறுபயிறு-அரை கப்
பெரிய வெங்காயம்-2
வற்றல் மிளகாய்-4
கறிவேப்பிலை- சிறிது
கடுகு- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
எண்ணெய்- 4 மேசைக்கரண்டி
தேவையான அளவு உப்பு

கீழே உள்ளவற்றை ஒன்று பாதியாக நசுக்கிக் கொள்ளவும்.
3 பச்சை மிளகாய், அரை கப் தேங்காய்த்துருவல், அரை ஸ்பூன் சீரகம்., கறிவேப்பிலை சிறிது, 3 பூண்டு பற்கள்


 

சிறு பயிறை உப்பு சேர்த்து முத்து முத்தாக வேகவைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தையும் பீட்ரூட்டையும் பொடியாக நறுக்கிக் கொள்லவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
கடுகைப் போட்டு அது வெடித்ததும் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் பீட்ரூட், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முக்கால்வாசி வெந்ததும் பயிறு, நசுக்கிய கலவை சேர்த்துக் கிளறி வேக வைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

good taste, everybody liked it.

Think Positively

நல்லா இருந்தது நான் செய்து பார்த்தேன் ரொம்ப நன்றி

அன்புள்ள தேவி!

செய்து பார்த்து நன்றாக வந்தது என்று எழுதியிருப்பது கண்டு என் மகிழ்வையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்!!

அன்புள்ள மனோ மேடம் வித்தியாசமாக பீட்ருட்டில் செய்ய தேடியபோது உங்களுடைய இந்த குறிப்பு கிடைத்தது. பீட்ரூட் அவ்வளவாக சாப்பிட மாட்டேன். ஆனால் இந்த முறையில் செய்த போது மிகவும் நன்றாக இருந்தது. பூண்டு சாதமும், இந்த பொரியலும் நல்ல காம்பினேஷனாக இருந்தது. இந்த குறிப்பை குடுத்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

உங்களின் விரிவான அன்பான பின்னூட்டம் எனக்கு மிக்க மகிழ்வைத்தந்தது. தன்களுக்கு என் அன்பான நன்றி!!

மனோ ஆன்டி ,
இதனை பீட்ருடுக்கு பதிலாக காரட்டில் செய்தேன். நன்றாக இருந்தது. நான் தேங்காயினை சேர்க்கவில்லை. சேர்த்து இருந்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சிறுபயிறு என்று நீங்கள் குறிப்பிடுவது முழு பச்சை பயிறினை தானே? என் என்றால் நான் அதனை தான் ஊறவைத்து செய்தேன்.
குறிப்புக்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

அன்பு கீதா!

பீட்ரூட்டிற்கு பதிலாக காரட்டை வைத்து வித்தியாசமாக செய்து பார்த்ததும் சுவையாக வந்ததும் அறிந்து மகிழ்ந்தேன். சிறு பயிறு என்று நான் குறிப்பிட்டிருந்தது முழுப்பயிறைதான். உடைத்த பச்சைப் பயிரையும் அதுபோலவே சொல்வார்கள். என் அன்பு நன்றிகள்!!

வீக்கென்ட் கெட்டுகெதருக்கு பாட்லக், என் பங்குக்கு இந்த பொரியல் செய்துகொண்டு போயிருந்தேன். எல்லோரும் 'பொரியல் யார் செய்தது, ரொம்ப நல்லா இருக்கு' என்று சொல்லி சாப்பிட்டார்கள் மேடம்!. கரெக்ட்டா என்னிடம் பீட்ருட் இருந்தது, கூடவே நான் எப்போதும் செய்யும் முறையிலிருந்து டிபஃரெண்ட்டா இருக்கவும் ட்ரை பண்ணினேன். இனி அடிக்கடி இந்த மாதிரி செய்வேன். ரெஸிப்பி பிரிண்ட் செய்து வைத்தாயிற்று! : )

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அன்புள்ள சுஸ்ரீ!

ஒரு கெட்-டுகெதரில் இந்த பொரியல் செய்தளித்து பலரின் பாராட்டுக்களைப்பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. உங்களின் அன்புப் பின்னூட்டத்திற்கு என் நன்றி!!

அன்பு மனோ அக்கா
உங்களது பீட்ரூட் பொரியல் மிகவும் சுவையாக இருக்கிறது..தயிர் சாதத்துக்கேற்ற அருமையான பொரியல்..குறிப்பிற்கு மிக்க நன்றி..ஆச்சரியம் என் கணவரும் சாப்பிட்டார்

பீட்ரூட் பொரியலின் பின்னூட்டத்திற்கு என் நன்றிகள்!! இது என் கேரளத்து சினேகிதியிடம் கற்றது. உங்கள் கணவருக்கும் பிடித்திருப்பது எனக்கு மகிழ்வைத் தந்தது.